“2-வது முறையாக 25,000 மெட்ரிக் டன் சன்ன ரக அரிசி விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது”- அமைச்சர் வெங்கடரமணன்

Priya
715 Views
2 Min Read

“தமிழ்நாட்டில் மக்களிடம் கிடைக்கப்பெற்ற வரவேற்பு தொடர்ந்து கூட்டுறவுத்துறை அங்காடிகளில் இரண்டாவது முறையாக 25 ஆயிரம் மெட்ரிக் டன் சன்ன ரக அரிசி விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது” என உணவு மற்றும் குடியுரிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு உதவிகரமாக செயல்பட தமிழக அரசு தயாராக உள்ளது. ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் வழங்குவதை பொருத்தவரை குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைதாரர்கள் அரிசி அல்லது சர்க்கரை என அவர்களுக்கு எது தேவையோ அதை வாங்கிக் கொள்ளலாம். தற்போது முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைதாரர்கள், பொருட்கள் பெறாதோர் என மூன்று பிரிவுகளாக அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டுறவுத்துறை அங்காடிகளில் கிலோ ரூ.30 சன்னரக அரிசி விற்பனை மக்களிடம் வரவேற்பு பெற்று நன்றாக நடைபெற்று வருகிறது. அதாவது 25 ஆயிரம் மெட்ரிக் டன் விற்பனைக்கு வழங்கப்பட்டது. அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது. இரண்டாவது முறையாக 25 ஆயிரம் மெட்ரிக் டன் விற்பனைக்கு வழங்கப்படவுள்ளது. அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு விரைவில் குறையும்.

முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு ரேஷன் அரிசி உட்கொள்வதாக தெரிவித்துள்ளார், அவர் இதற்கு முன் பலமுறை அமைச்சராக சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர் அவரிடம் ரேஷன் பொருட்கள் விநியோக நிலவரம் குறித்து நாம் கேட்டிருக்க வேண்டும்.” என்றார்.

அதேபோல், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வெள்ள பாதிப்பு எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் மேற்கொண்டுள்ளதாக கூறி வருகிறார் என்ற கேள்விக்கு, “அவர் தங்கள் ஆட்சியில் நடவடிக்கையை மேற்கொள்ளப் பட்டதாக கூறினால் கூறிக் கொள்ளட்டும். தமிழக வெற்றிக் கழக ஆட்சியைப் பொறுத்தவரை பேச்சைக் காட்டிலும் செயலில் நடவடிக்கை எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

எதிர்க்கட்சிகள், முதல்வர் குறித்து அவதூறு கருத்துக்கள் தெரிவித்த வருகின்றனர். அதனை மக்களும் கவனித்து கொண்டு உள்ளனர். அவதூறு கருத்துக்கள் வரம்பை மீறி பேசுவோர் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்று அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply