தயாரிப்பாளருக்கு ரூ.4.25 கோடியை வட்டியுடன் தர இயக்குநர் கவுதம்​ வாசுதேவ்​ மேனனுக்கு உத்தரவு

Priya
23 Views
2 Min Read

ஆர்​.எஸ்​.இன்போடெயின்மென்ட்​ நிறு​வனத்​திட​மிருந்​து பெற்​ற ரூ.4.25 கோடியை 12 சதவீத வட்​டி​யுடன்​ திருப்​பி வழங்​க வேண்டுமென இயக்​குநர்​ கவுதம் வாசுதேவ்​ மேனனுக்​கு சென்னை உயர் நீதிமன்றம்​ பிறப்​பித்​த ஆணை​யை உச்ச நீதிமன்றம்​ உறு​தி செய்​து உத்​தர​விட்​டுஉள்​ளது.

ஆர்​.எஸ்​. இன்​போடெ​யின்​மென்ட்​ நிறு​வனத்​தை நடத்​தி வரும்​ எல் ரெட்​ குமார்​ என்​பவர்​ கடந்​த 2013-ம்​ ஆண்​டு இயக்​குநர்​ கவுதம்​ வாசுதேவ்​ மேனனுக்​கு எதி​ராக சென்​னை உயர்​ நீதி​மன்​றத்​தில்​ வழக்​கு தொடர்ந்​திருந்​தார்​.

அதில்​, நடிகர்​ சிம்​புவை நடிப்பில் கவுதம்​ வாசுதேவ்​ மேனனுடன்​ இணைந்​து 2008-ல்​ புதிய படத்​தை தயாரிப்​ப​தற்​காக ஒப்​பந்​தம்​ போட்​ட​தாக​வும்​ அதற்​காக ரூ.4.25 கோடி முன்​பண​மாக கவுதம்​ வாசுதேவ்​ மேனனுக்​கு வழங்​கிய​தாக​வும்​ தெரி​வித்​திருந்​தார்​.

ஆனால்​, ஒப்​பந்​தத்​தின்​படி படத்தை கவுதம்​ வாசுதேவ்​ மேனன்​ இயக்​கிக்​ கொடுக்​க​வில்​லை என்​றும் வாங்​கிய முன்​பணத்​தை​யும்​ திருப்​பித்​ தரவில்​லை எனவும்​ குற்​றம்​சாட்​டி​யிருந்​தார்​. இந்​த வழக்கை வி​சா​ரித்​த சென்​னை உயர்​நீ​தி​மன்​ற தனி நீதிப​தி, திரைப்​படம்​ இயக்​கு​வதற்​காக வாங்​கிய ரூ.4.25 கோடியை பட ​தயாரிப்​பாளரிடம்​ வட்​டி​யுடன்​ திருப்​பிக்​ கொடுக்​க வேண்​டுமென கவுதம்​ வாசுதேவ்​ மேனனுக்​கு கடந்​த 2022-ம்​ ஆண்​டு உத்தரவிட்டிருந்​தார்​.

இந்​த உத்​தர​வை எதிர்த்​து சென்​னை உயர்​ நீதி​மன்​றத்​தில்​ டிவிசன்​ அமர்​வு முன்​பு கவுதம்​ வாசுதேவ்​ மேனன்​ மேல்​முறை​யீடு செய்​திருந்​தார்​. வி​சா​ரணை​யின்​போது எல்​ரெட்​ குமார்​ தரப்​பில்​, திரைப்​படத்​தை இயக்​கிக்​ கொடுக்​க​வில்​லை எனவும் வாங்​கிய பணத்​தை​யும்​ கவுதம்​ வாசுதேவ்​ மேனன்​ திருப்​பித்​ தரவில்​லை எனவும்​ தெரிவிக்​கப்​பட்டது.

அதற்​கு, கவுதம்​ வாசுதேவ்​ மேனன்​ தரப்​பில்​, 2012-ல்​ வெளி​யான ‘நீ தானே என்​ பொன்​வசந்​தம்​’ திரைப்​படமே அந்​த ஒப்​பந்​தத்​தின்​ கீழ்​ எடுக்​கப்​பட்​ட படம்​ என்​றும், அதன்​ மூலம்​ தங்​களது கடமை முடிந்து​விட்​டது என்​றும்​ வா​திடப்​பட்​டது. ஆனால்​, இந்​த வாதத்​தை நிராகரித்​த சென்​னை உயர்​ நீதி​மன்​ற டிவிசன்​ அமர்​வு, நீதானே என்​ பொன்​வசந்​தம்​ திரைப்​படம்​ 2011-ல்​ போடப்​பட்​ட முற்​றி​லும்​ புதி​ய ஒப்​பந்​தத்​தின்​ கீழ்​ எடுக்​கப்​பட்​டது என்​றும்​, 2008 ஒப்பந்தத்துக்கு பெறப்​பட்​ட ரூ.4.25 கோடி இதற்​காகப்​ பயன்​படுத்தப்​பட​வில்​லை எனவும்​ தெரி​வித்​தது.

மேலும்​ தனி நீதிப​தி​யின்​ உத்​தரவை உறு​தி செய்​த டிவிசன்​ அமர்வு, இயக்​குநர்​ கவுதம்​ வாசுதேவ்​ மேனனின்​ மேல்​முறை​யீட்​டு மனுவை தள்​ளு​படி செய்​ததோடு, வாங்​கிய ரூ.4.25 கோடியை கவுதம்​ வாசுதேவ்​ மேனன்​, 2010 மே மாதம்​ முதல்​ கணக்​கிட்​டு ஆண்​டுக்​கு 12 சதவீத வட்​டி​யுடன்​ சேர்த்​து வழங்​க வேண்​டும்​ என்றும்​ ஆணை​யிட்​டது. சென்​னை உயர்​ நீதி​மன்​றத்​தின்​ இந்​த ஆணைக்​கு எதி​ராக கவுதம்​ வாசுதேவ்​ மேனன்​ மற்​றும்​ அவரது போட்​டான்​ ஃபேக்​டரி நிறு​வனம்​ உச்​ச நீதி​மன்​றத்​தில்​ மேல்​முறையீடு செய்​தது. இந்​த மேல்​முறை​யீட்​டு மனு உச்​சநீதி​மன்றத்தின்​ நீதிப​தி​கள்​ ஜெ.பி. பர்​தி​வாலா, கே.​வினோத்​ சந்​திரன்​ ஆகியோர்​ அடங்​கிய அமர்​வு முன்​பு வி​சா​ரணைக்​கு வந்​தது.

அப்​போது மனுவை பரிசீலித்​த நீதிப​தி​கள்​, சென்​னை உயர்​ நீதிமன்​றம்​ பிறப்​பித்​த ஆணை​யில்​ தலை​யிடு​வதற்​கு எந்​த காரணத்தை​யும்​ காண முடிய​வில்​லை என்​று கூறி இயக்​குநர்​ கவுதம்​ வாசுதேவ்​ மேனன்​ தாக்​கல்​ செய்​த மேல்​ முறை​யீட்​டு மனுவை தள்ளு​படி செய்​து உத்​தர​விட்​டனர்​. இதன்​ மூலம்​ கவுதம்​ வாசுதேவ்​ மேனன்​, ஆர்​.எஸ்​. இன்​போடெ​யின்​ மென்ட்​ நிறு​வனத்திட​மிருந்​து பெற்​ற ரூ.4.25 கோடியை நீதி​மன்​றம்​ நிர்ணயித்த வட்​டியுடன்​ திருப்​பி செலுத்​த வேண்​டும்​ என்​பது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply