டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இந்தப் படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடித்தார். படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்தார். கிறிஸ்துவ ஆலயத்தை காப்பதற்காக அந்த ஊருக்கு அழைத்து வரப்படுகிறார் சண்டியர்.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.45 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ.20 கோடி மட்டுமே வசூலித்து தோல்வி அடைந்தது.
இந்நிலையில், இந்தப் படம் ஜூலை 24-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி 3 மாதங்களுக்குப் பிறகு இந்தப் படம் ஓடிடியில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

