ஆதிதிராவிடர், பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை கண்காணிக்க முதல்வர் தலைமையில் குழு

Priya
64 Views
1 Min Read

ஆதிதிராவிடர் மற்​றும் பழங்​குடி​யினர் மீதான வன்​கொடுமை​களை கண்​காணிக்க முதல்​வர் தலை​மை​யில் புதிய உயர்​நிலை விழிப்பு மற்​றும் கண்​காணிப்​புக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறை செயலர் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் மீதான வன்​கொடுமைச் சம்​பவங்​களைத் தடுக்​க​வும், தடுப்​புச் சட்​டம் திறம்பட அமல்​படுத்​தப்​படு​கிறதா என்​பதை தொடர்ந்து கண்​காணிக்​க​வும், மாநில அளவி​லான உயர்​நிலை விழிப்பு மற்​றும் கண்​காணிப்​புக் குழுவை அரசு மறுசீரமைத்​துள்​ளது.

இந்​தக் குழு​வின் தலை​வ​ராக தமிழக முதல்​வர் செயல்​படு​வார். அமைச்​சர்​கள் மரிய வில்​சன், வன்​னியரசு, ராஜ்மோகன், பி.​விஸ்​வ​நாதன் உட்பட 7 அமைச்​சர்​கள், திரு​மாவளவன், சசி​காந்த் செந்​தில், தனபால் உட்பட 8 எம்​பிக்​கள் மற்​றும் 37 எம்​எல்​ஏக்​கள் உறுப்​பினர்​களாக இருப்​பார்​கள்.

ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறைச் செய​லா​ளர், குழு​வின் ஒருங்​கிணைப்​பாள​ராக செயல்​படு​வார். ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினருக்கு எதி​ரான வன்​கொடுமைச் சம்​பவங்​களைத் தடுப்​ப​தற்​கும், சட்ட அமலாக்​கத்தை வலுப்​படுத்​து​வதற்​கும் இந்த உயர்​நிலை கண்​காணிப்​பு குழு முக்​கிய பங்​காற்​றும். இவ்​வாறு அந்த அரசாணை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply