நடிகர் அஜித் எடுத்த போட்டோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் யோகி பாபு
பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சியில் அறிமுகமாகி அதன் பின்னர் சின்ன சின்ன காமெடி காட்சிகளில் நடித்து வந்த யோகி பாபு தற்போது பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் அவரை கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.
இந்நிலையில், வேதாளம் படிப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் ஒன்றை நடிகர் யோகிபாபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மொட்டை ராஜேந்திரன் மற்றும் யோகி பாபுவை நடிகர் அஜித்குமார் புகைப்படம் எடுக்கும் போட்டோ தான் அது. இந்த புகைப்படம் தான் தனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் என்று யோகி பாபு அதில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி இருக்கிறது.