நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படத்தை பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியிருந்தார்.
விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விக்ரம், பார்வதி போன்றோரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி நடை போட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வரை கிட்டத்தட்ட ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் , நடிகர் விக்ரம், “தங்கலான்’ படத்தின் வெற்றிக்கு நன்றி கூறி படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருந்து பரிமாறியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.