தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள வன்னிய சமூக மக்களுக்கு 10.5 % சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது
ஆனால், இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதன் விளைவாக, சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க முடியும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அவசர அவசரமான இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே இந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தற்போது 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்டு குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கப்படாமலேயே கல்வி வேலை வாய்ப்பில் 10.5 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வன்னியர்கள் இருக்கிறார்கள் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் 20 சதவீத இடஒதுக்கீட்டுக்குள் உட்பிரிவாக இருக்கும் வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது பாமகவினரின் நீண்ட நாள் கோரிக்கை..
ஆனால் மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் 10.5 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் வன்னியர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, பொன்பாண்டியன் என்பவர் ஜூலை 31 ஆம் தேதி அன்று பிசி, எம்பிசி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வன்னியர் சமூக மக்கள் வேலை வாய்ப்பில் பெற்ற இடங்களைப் பற்றி கேட்டிருந்தார்.
இதன்படி, MBBS மற்றும் PG படிப்புகள், மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர்கள் வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் வாரியம் மற்றும் மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் போன்ற அரசு நிறுவனங்களின் ஆட்சேர்ப்புகள் குறித்து வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ்சில் 2018 முதல் 2022 வரை மொத்தமாக வழங்கப்பட்ட 24,330 இடங்களில்,
எம்பிசி/ DNC – க்கு மொத்தம் 4,873 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இதில், வன்னியர்கள் – 2781 இடங்கள் பெற்றிருந்தனர்.
இதில் எம்பிசி மற்றும் டிஎன்சிகளுக்கான 20 % சதவீத இதுக்கீட்டில் இருந்து 11.4 சதவீதமும், மொத்த இடங்களில் 13.8 சதவீதமும் வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
BDS படிப்பில், மொத்தம் – 6,234 இடங்களில் MBC/DNC க்கு 20% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதாவது 933 இடங்கள்..
அதில் வன்னியர்கள் பிரிவில் 437 பேர்களும், மொத்த இடங்களில் 668 பேர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இடஒதுக்கீட்டின் படி 9.4 சதவீதம் வன்னியர் பிரிவில், 10.7 சதவீதம் வன்னியர் சமூகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதுகலை மருத்துவ இடங்களில் மொத்தம் உள்ள 6,966 இடங்களில் எம்பிசி மற்றும் டிஎன்சி க்கு 1363 பேர்களும், வன்னியர் பிரிவுக்கு 1363 பேர்களும் இடம் பெற்றுள்ளனர். சதவீதத்தின் அடிப்படையில் 10.2 சதவீதம் வன்னியர் சமூகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எம்டிஎஸ் படிப்புகளில் 940 இடங்களில் எம்பிசி மற்றும் டிஎன்சி க்கு 137 இடங்களும், வன்னியர்களுக்கு 66 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர் பிரிவுக்கு மட்டுமே 9.6 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது பாமகவினரின் கோரிக்கையாக இருக்கும் 10.5 சதவீத மறுசீரமைப்பை விட அதிகமாக இருந்தது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கொடுத்த தகவலின் படி வன்னியர் சமூகத்தைச் சார்ந்த 24,330 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
2013- 22 காலகட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான மொத்த இடங்கள் 26,784 இடங்களில் வன்னியர்களுக்கு 5,215 இடங்கள் ஒதுக்கப்பட்டது. வன்னியர் சமூகத்துக்கு 19.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது..
குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற 2382 பேர்களில் வன்னியர்கள் 270 பேர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 11.2 சதவீதம்
தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2013- 22 காலகட்டத்தில் 1,919 பணிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 605 எம்பிசி,டிஎன்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில்,உதவி ஆய்வாளர் பணி 327 வன்னியர் சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் 17 சதவீதமாகும்…
இப்படியாக 2018 லிருந்து 22 வரை பாமகவினர் கோரிய இடங்களை விட அதிகமான இடங்களை வன்னியர்கள் இடஒதுக்கீடாக பெற்று வந்துள்ளது ஆர்டிஐ அளித்த தகவலின் மூலம் தெரியவந்துள்ளது..