கலை பண்பாட்டுத் துறையின் வாயிலாக ஓவிய மற்றும் சிற்பக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தவும், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் கலைஞர்களின் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ‘ஓவியச்சந்தை’ திட்டத்தினை செயல்படுத்திட ரூ.10 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது தமிழக அரசு.
இதைத்தொடர்ந்து சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் கலை பண்பாட்டுத் துறை மற்றும் அரசு கவின் கலைக் கல்லூரி இணைந்து நடத்தும் 100 ஓவிய, சிற்பக் கலைஞர்களின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கிய ஓவியச்சந்தையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இன்று தொடங்கி வைத்தார்