மாநிலங்களவையில் ஆம் ஆத்மி உறுப்பினர் ராகவ் சதா, “இந்திய குடியுரிமையை துறந்துவிட்டு எவ்வளவு பேர் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர் என்றும் அதற்கான காரணங்கள் என்ன” என்பது குறித்தும் மத்திய சபையில் கேள்வியெழுப்பினார் .

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் 2023-ம் ஆண்டில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 219 பேர் இந்திய குடியுரிமையை வேண்டாம் என துறந்து விட்டு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தியர்கள் தங்களது குடியுரிமையை துறப்பது, அவர்களது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது என்றும் இன்றைய அறிவுசார் பொருளாதாரத்தில் உலகளாவிய பணியிட திறனை அரசும் அங்கீகரிக்கிறது, மேலும் வெற்றிகரமான, வளமையான மற்றும் செல்வாக்கு மிக்க புலம்பெயர்ந்தோர் இந்தியாவின் சொத்தாக திகழ்கின்றனர் என்றும் பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here