அதிக காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவுரை – டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

Priya
9 Views
2 Min Read

அரசு துறை​களில் அதிக காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப அறி​வுரை வழங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யின்​படி அனைத்​துப் போட்​டித் தேர்​வு​களும் நடத்​தப்​படும் என்​றும் டிஎன்​பிஎஸ்சி தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு புதிய அரசு பதவி​யேற்​றுள்ள நிலை​யில், அரசு துறை பணி நியமனங்​கள் எந்த வகை​யில் நடை​பெறும் என்ற எதிர்​பார்ப்பு போட்​டித் தேர்​வு​களுக்கு தயா​ராகி வரும் தேர்​வர்​கள் இடையே எழுந்​துள்​ளது.

இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி தலை​வர் எஸ்​.கே.பிர​பாகரிடம் கேட்​ட​போது அவர் கூறிய​தாவது: அரசுத் துறை​களில் அதிக எண்​ணிக்​கையி​லான காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப மனித வளத்​துறை அறி​வுரை வழங்​கி​யுள்​ளது.

அரசு துறை​களில் உள்ள காலிப்​பணி​யிடங்​களை விரைந்து நிரப்​புவது தொடர்​பாக டிஎன்பிஎஸ்சி-​யிட​மும் ஆலோ​சனை நடத்தி இருக்​கிறது.

டிஎன்​பிஎஸ்​சி​-யின் 2026-ம் ஆண்​டுக்​கான வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யின்​படி, போட்​டித்​தேர்​வு​களுக்​கான அறி​விப்​பு​கள் திட்​ட​மிட்​டபடி வெளி​யிடப்​பட்டு தேர்​வு​கள் நடத்​தப்​படும்.

அந்த வகை​யில் முதல் அறி​விப்​பாக ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வுக்கு (நேர்​முகத்​தேர்வு இல்​லாத பதவி​கள்) கடந்த மே 20-ம் தேதி அறி​விப்பு வெளி​யிடப்​பட்டு ஆன்​லைனில் விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்டு வரு​கின்​றன.

புதிய பணி​யிடங்​கள் வரும்​பட்​சத்​தில் பிற்​சேர்க்கை அறி​விப்பு வெளி​யிடப்​படும். அதே​போல் காலிப்​பணி​யிடங்​களின் எண்​ணிக்கை அதி​கரித்​தா​லும் இதே​முறை​யில் சேர்த்​துக்​கொள்​ளலாம்.

குரூப்-1 தேர்​வுக்​கான அறி​விப்பு ஜூன் 23-ம் தேதி வெளி​யிடப்​படும். என்​னென்ன பதவி​கள் மற்​றும் காலி​யிடங்​கள் தொடர்​பான விவரங்​கள் அறி​விப்​பில் இடம்​பெறும். இதே​போல், அனைத்துத் தேர்​வு​களுக்​கான அறி​விப்​பு​களும் குறித்த காலத்​தில் வெளி​யிடப்​பட்டு தேர்வு முடிவு​களும் விரை​வாக வெளி​யிடப்​படும்.

கடந்த ஆண்​டு, முதல்​முறை​யாக தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​தில் உதவி​யாளர் பணி​யிடங்​கள் டிஎன்​பிஎஸ்சி மூலம் நிரப்​பப்​பட்​டன.

இந்த ஆண்டு பல்​வேறு அரசு பல்​கலைக்​கழகங்​களிட​மிருந்து ஆசிரியர் அல்​லாத பதவி​களில் உள்ள காலிப்​பணி​யிடங்​கள் வந்த வண்​ணம் உள்​ளன. பதவி நிலைக்கு ஏற்ப அந்த பணி​யிடங்​கள் ஒருங்​கிணைந்த குரூப்-2 தேர்​விலோ அல்​லது குரூப்​-2ஏ தேர்​விலோ சேர்க்​கப்​படும்.

தமிழ்​நாடு மின்​சார வாரி​யத்​தில் விரை​வில் 15 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என்ற அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, அந்த காலிப்​பணி​யிடங்​களும் டிஎன்​பிஎஸ்சி வாயி​லாக படிப்​படி​யாக நிரப்​பப்​படும்​. இவ்​வாறு அவர்​ கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply