விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்

Priya
21 Views
2 Min Read

சர்​வ​தேச அளவி​லான பல்​வேறு போட்​டிகளில் சாதனை​கள் படைத்த விளையாட்டு வீரர்​களுக்கு அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா நிதி​யுதவி வழங்​கி​னார். சென்​னை, நேரு உள் விளை​யாட்டு அரங்​கத்​தில் தமிழக விளை​யாட்டு மேம்​பாட்​டுத்​துறை சார்​பில் சர்​வ​தேச அளவில் சிறந்து விளங்​கும் தமிழக வீரர்​களை ஊக்​குவிக்​கும் நிகழ்ச்சி நேற்று நடந்​தது.

இதில், பொதுப்​பணி மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத்​துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா கலந்து கொண்டு பாரா பேட்​மிண்​டன் வீராங்​கனை துளசிமதி முரு​கேசனுக்கு நிதி​யுத​வி​யாக 10 லட்​சம் ரூபாய்க்​கான காசோலையை வழங்​கி​னார்.

இம்​மாதம் நடை​பெறவுள்ள பிரெஞ்சு பாரா பேட்​மிண்​டன் சர்​வ​தேச போட்​டி, பிரிட்​டிஷ் மற்​றும் ஐரிஷ் பாரா பேட்​மிண்​டன் சர்​வ​தேச போட்​டிகளில் பங்​கேற்​ப​தற்​கான பயண மற்​றும் பயிற்​சிச் செல​வு​களுக்​காக தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் தலைசிறந்த விளை​யாட்டு வீரர்​களுக்​கான சிறப்பு உதவித் தொகை திட்​டத்​தின் கீழ் இந்​நி​தி​யுதவி வழங்​கப்​பட்​டது.

மேலும், பாரா துப்​பாக்கி சுடு​தல் விளை​யாட்டு வீரர் மனோஜ் கு​மாருக்கு மாநில மற்​றும் தேசிய அளவி​லான போட்​டி​யில் கலந்து கொண்டு பதக்​கம் வெல்ல ஏது​வாக தமிழ்​நாடு சாம்​பியன்ஸ் அறக்​கட்​டளை மூலம் ரூ.6,27,795 மதிப்​பில் துப்​பாக்கி சுடு​தல் விளை​யாட்டு உபகரணத்​தை​யும் வழங்​கி​னார்.

அதே​போல், ஹாங்​காங்​கில் மே மாதம் நடை​பெற்ற ஆசிய யு 20 தடகள சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் தமிழக வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதில் தமிழக அரசின், வெற்​றி​யாளர்​கள் மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் கீழ் பயிற்சி பெற்ற விளை​யாட்டு வீரர்​களான ஜித்​தின அர்​ஜுனன் (ஆண்​கள் நீளம் தாண்​டு​தல்), சாதனா ரவி (பெண்​கள் மும்​முறை தாண்​டு​தல்) மற்​றும் பாவனா (பெண்​கள் 4×100 தொடர் ஓட்​டம்) ஆகியோர் வெள்​ளிப் பதக்​கங்​களை வென்​றுள்​ளனர்.

அவர்​களுக்கு தலா ரூ. 3 லட்​ச​மும், இவர்​களு​டன் ஆண்​கள் 4×400 தொடர் ஓட்​டப் பிரி​வில் வெண்​கலப் பதக்​கம் வென்ற ரஞ்​சித் குமாருக்கு ரூ. 2 லட்​ச​மும் வழங்​கி​னார்.

சீனா​வில் நடை​பெற உள்ள 2026 ஆசிய கடற்​கரை சர்​வ​தேச விளை​யாட்டு போட்​டி​யில் கலந்​து கொள்​ளும் சைலிங் விளை​யாட்டு வீரர் சித்​தரேஷ் நடேசன் உயர்தர உபகரணங்​கள் வாங்​கு​வதற்கு எலைட் திட்​டத்​தின் கீழ் ரூ. 4.65 லட்​சத்​திற்​கான காசோலை​யினை வழங்​கி​னார்.

இந்​நிகழ்​வின் போது தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர் ஜெ. மேக​நாத ரெட்​டி, மாவட்ட வரு​வாய் அலு​வலர் ரெ.சுமன்​, பொது மேலா​ளர்​ எல்​.சுஜா​தா உள்​ளிட்​டோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply