சென்னை மெட்ரோ சுரங்கப்பாதை பணிக்காக டிடிகே சாலையில் போக்குவரத்தில் மாற்றம்

Priya
778 Views
1 Min Read

சென்னை மெட்ரோ ரயில் சுரங்​கப்​பாதை பணிக்​காக, டிடிகே சாலை மற்​றும் ஸ்ரீராம் நகர் வடக்கு பகு​தி​யில் நாளை (அக்.8) முதல் 3 மாதங்​களுக்கு போக்​கு​வரத்​தில் மாற்​றம் செய்யப்பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக போக்​கு​வரத்து போலீ​ஸார் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: “அடை​யார் கேட் ஹோட்​டல் மற்​றும் அபிராமபுரம் 4-வது தெரு​விலிருந்து டிடிகே சாலை வழி​யாக ஸ்ரீராம் நகர் வடக்கு தெருவை நோக்கிச் செல்​லும் வாகனங்களுக்கு கட்​டுப்​பாடு விதிக்​கப்​பட்​டுள்​ளது. அதற்கு பதிலாக வாக​னங்​கள் டிடிகே சாலை 1-வது குறுக்குத் தெரு வழியாகச் சென்று தங்​கள் இலக்கை அடைய​லாம்.

இதேபோல் ஸ்ரீராம் நகர் வடக்கு தெரு​விலிருந்து டிடிகே சாலையை நோக்கி வரும் வாக​னங்​களுக்கு கட்​டுப்​பாடு விதிக்கப்பட்​டுள்​ளது. அதற்கு பதிலாக வாக​னங்​கள் வடக்கு தெரு மற்​றும் டிடிகே சாலை 1-வது குறுக்கு தெரு வழி​யாகச் சென்று தங்கள் இலக்கை அடைய​லாம். இவ்​வாறு போக்​கு​வரத்து போலீஸார்​ தெரி​வித்​துள்​ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply