எவரெஸ்ட், எல்ஜி பெருங்காயத் தூள் விற்க தடை: இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் உத்தரவு

Priya
995 Views
2 Min Read

எவரெஸ்ட் மற்​றும் எல்ஜி நிறு​வனங்​களின் பெருங்​கா​யத் தூள் விற்​பனைக்கு இந்​திய உணவுப் பாது​காப்​பு, தர நிர்ணய ஆணை​யம் தடை விதித்​துள்​ளது.

உணவுப் பொருள் தயாரிப்​பில் பிரபல​மான எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்​ஸ், லால்ஜி கோதூ (எல்​ஜி) ஆகிய நிறு​வனங்​கள் தயாரிக்​கும் பெருங்​கா​யத் தூள் தரமற்​றவை என்​றும், விதி​களை மீறி உற்​பத்தி செய்​யப்​பட்​டவை என்​றும் கண்​டறியப்​பட்​டுள்​ளது. இதனால் அவற்​றின் விற்​பனைக்கு தடை விதிக்​கப்​படு​வ​தாக உணவுப் பாது​காப்​பு, தர நிர்ணய ஆணை​யம் (FSSAI) தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து ஆணை​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: எவரெஸ்ட் நிறு​வனம் தயாரிக்​கும் பெருங்​கா​யத் தூளின் அனைத்து வகை​யும் உணவு ஆய்​வக சோதனைக்கு உட்​படுத்​தப்​பட்ட நிலை​யில், அவை தரமற்​றவை, தவறாக முத்​திரை​யிடப்​பட்​டவை என்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

உணவுப் பொருள் பாது​காப்பு விதி​முறை​களின்​படி, ஆல்​கஹாலில் கரையக்​கூடிய சாறின் அளவு குறைந்​த​பட்​சம் 5 சதவீதம் இருக்க வேண்​டிய நிலை​யில், எவரெஸ்ட் பெருங்​கா​யத் தூள் மாதிரி​களில் 3 சதவீதம் மட்​டுமே இருந்​தது.

அதே​போல, அதன் மஞ்​சள் கலவை பெருங்​கா​யத் தூளில் 3.29 சதவீத​மும், கருப்​புக் கலவை பெருங்​கா​யத் தூளில் 4.4 சதவீத​மும் மட்​டுமே ஆல்​கஹால் சாறு அளவு பதி​வான​தால், இவை​யும் தரமற்​றவை என்று கண்​டறியப்​பட்​டன. இதன்​மூலம் தயாரிப்​பில் தேவை​யான அளவு அசல் பெருங்​கா​யம் சேர்க்​கப்​பட​வில்லை என்​பது உறு​தி​யாகி உள்​ளது.

எல்ஜி பெருங்​காயத்​தில் அனு​ம​திக்​கப்​பட்ட அளவை​விட மாவுச்​சத்து 15 முதல் 32 சதவீதம் வரை அதி​கம் இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. இதன் காரண​மாக, இரு நிறு​வனங்​களின் அனைத்து வகை​யான பெருங்​கா​யத் தூள் விற்​பனைக்​கும் உடனடி​யாக தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. சந்​தை​யில் ஏற்​கெனவே விற்​பனைக்கு இருக்​கும் தரம் குறைந்த பெருங்​கா​யத் தூளை நிறு​வனங்​கள் தாமாக முன்​வந்து திரும்​பப் பெற​வும் அறி​வுறுத்​தப்​பட்​டு உள்​ளது.

இந்த முறை​கேடு​களை சரிசெய்​து, விதி​மீறல்​களுக்​கான விளக்​கத்தை அளிக்​க​வும், தரத்தை சரிசெய்​வதற்​கான திருத்​தப்​பட்ட திட்ட அறிக்​கையை தாக்​கல் செய்​ய​வும் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. நிறு​வனங்​கள் தரக் கட்​டுப்​பாட்டு விதி​களை முழு​மை​யாக பூர்த்தி செய்​யும் வரை விற்​பனைக்​கான தடை அமலில் இருக்​கும். தவறுகளை திருத்​திக் கொள்​ளா​விட்​டால் நடவடிக்கை எடுக்​கப்​படும் என எச்​சரிக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply