தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு

Priya
779 Views
1 Min Read

தமிழக முதல்​வர் விஜய் பெரம்​பூர் தொகு​தியில் வெற்றி பெற்​றதை எதிர்த்து திமுக சார்​பில் போட்​டி​யிட்ட ஆர்​.டி.சேகர் மற்​றும் தொகுதி வாக்​காளர்​களான தினேஷ், லட்​சுமி நரசிம்​மன் ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் வழக்​கு​களைத் தொடர்ந்​திருந்​தனர்.

இதே​போல அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா வில்​லி​வாக்​கம் தொகு​தி​யில் வெற்றி பெற்​றதை எதிர்த்து திமுக வேட்​பாளர் கார்த்​திக் மோகன், வாக்​காளர் சிவ​ராஜ் ஆகியோர் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளனர்.

இந்த தேர்​தல் வழக்​கு​களை நிராகரிக்​கக்​கோரி முதல்​வர் விஜய் மற்​றும் அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா தரப்​பில் நிராகரிப்பு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன.

இந்த மனுக்​களை விசா​ரித்த நீதிபதி வி. லட்​சுமி நாராயணன் இந்த வழக்​கு​களை நிராகரிக்​கக்​கோரி விஜய் மற்​றும் ஆதவ் அர்​ஜுனா தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள மனுக்​களுக்கு வழக்கு தொடர்ந்​துள்ள திமுக வேட்​பாளர்​கள் மற்​றும் வாக்​காளர்​கள் பதிலளிக்க உத்​தர​விட்டு வி​சா​ரணையை வரும்​ செப்​.3-க்​கு தள்ளி வைத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply