​பாக்கெட் உணவு​களில் எச்சரிக்கை வாசகம்: 2 வார கெடு விதித்து உச்ச நீதிமன்றம் ஆணை

Priya
710 Views
1 Min Read

பாக்கெட் உணவுகளால் ஏற்​படும் ஊட்​டச்​சத்து சார்ந்த அபா​யங்​கள் குறித்து நுகர்​வோர் மற்​றும் குழந்​தைகளுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில், அதிக அளவு சர்க்​கரை, உப்பு மற்​றும் கொழுப்பு உள்ள பதப்​படுத்​தப்​பட்ட உணவுப் பொருட்​களின் முன்​புறத்​தில் எச்​சரிக்கை லேபிள்​களை அறி​முகப்​படுத்​து​வது தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் விசாரணைக்கு வந்​தது. நீதிப​தி​கள் ஜெ.பி.பர்​தி​வாலா, கே.வினோத் சந்​திரன் ஆகியோர் அடங்​கிய அமர்வு இந்த வழக்கை விசா​ரித்​தது.

அப்​போது, இந்த விவ​காரத்​தில் நீதி​மன்​றம் பிறப்​பித்த முந்​தைய உத்​தரவு செயல்​படுத்​தப்​ப​டாதது குறித்து மத்​திய அரசு வழக்கறிஞரிடம் நீதிப​தி​கள் கடும் அதிருப்​தியை வெளிப்படுத்தினர். நீதிப​தி​கள் தெரி​வித்​த​தாவது: “நீ​தி​மன்​றத்தை நீங்​கள் சாதா​ரண​மாக எடுத்​துக் கொள்​கிறீர்​களா? உத்தரவுகளைச் செயல்​படுத்​தாமல் அலட்​சி​ய​மாக இருந்​தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்​டிவரும்.

எவ்​வளவு அழுத்​தங்​கள் இருந்​தா​லும் நீதி​மன்ற உத்​தரவை நீங்​கள் பின்​பற்​றித்​தானே ஆக வேண்​டும்? இது​வரை என்ன நடவடிக்கை எடுத்​துள்​ளீர்​கள்​?இந்த நாட்டு மக்​கள் ஆரோக்​கிய​மாக இருக்​கக் கூடா​தா? குறிப்​பாக வளரும் குழந்​தைகள் நலமாக இருக்க வேண்​டா​மா? பாக்​கெட்​டு​களில் எச்​சரிக்கை அறி​விப்பை வெளி​யிடு​வ​தில் என்ன தயக்​கம்? உற்​பத்​தி​யாளர்​களுக்கு இது பிடிக்​காமல் போகலாம்; ஆனால், தாங்​கள் எதை உட்​கொள்​கிறோம் என்​பதை நுகர்​வோர் கட்​டா​யம் தெரிந்​து​கொள்ள வேண்​டும். பொது​மக்​களிடையே விழிப்​புணர்வை ஏற்​படுத்​து​வதே இதன் நோக்​கம்” என்று நீதிப​தி​கள் கார​சா​ர​மாகக் கேள்வி​களை எழுப்​பினர்.

மேலும், நீதி​மன்​றத்​தின் பரிந்​துரைகளை மத்​திய அரசு தானாக முன்​வந்து செயல்​படுத்​தத் தவறி​னால், நீதி​மன்​றமே உரிய உத்தரவைப் பிறப்​பிக்க நேரிடும் என்​றும் எச்​சரித்​தனர். இறுதியாக, பாக்​கெட் உணவு​களில் எச்​சரிக்கை வாசகம் பொறிப்பது தொடர்​பாக 2 வார காலத்​திற்​குள் உரிய முடிவை எடுத்து நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும்; தவறி​னால் கடுமை​யான உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கப்​படும் என எச்​சரித்​து வழக்கு வி​சா​ரணை​யை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply