அபிஷேக் சர்மா 38 பந்தில் 113 ரன் விளாசல்: டி20 தொடரை வென்றது இந்திய அணி

Priya
707 Views
3 Min Read

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்​டி​யில் அபிஷேக் சர்​மாவின் அதிரடி சதத்​தால் 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை தன்​வசப்​படுத்​தி​யது.

வெலிங்​டனில் உள்ள ஹென்றி மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 3 விக்கெட்​கள் இழப்​புக்கு 198 ரன்​கள் குவித்​தது. தனது 8-வது அரை சதத்தை அடித்த டேரில் மிட்​செல் 52 பந்​துகளில் 89 ரன்​கள் விளாசினார். ஃபின் ஆலன் 40 ரன்​களும், பெவன் ஜேக்​கப்ஸ் 39 ரன்களும் விளாசினர். இந்​திய அணி தரப்​பில் அர்​ஷ்​தீப் சிங், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

199 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணிக்கு அபிஷேக் சர்மா, வைபவ் சூர்​ய​வன்ஷி ஜோடி அதிரடி தொடக்​கம் கொடுத்தது. ஜேக்​கப் டஃபி வீசிய முதல் ஓவரில் 26 ரன்​கள் விளாசப்​பட்​டன. ஆடம் மில்னே வீசிய அடுத்த ஓவரில் 17 ரன்​களும், மைக்​கேல் பிரேஸ்​வெல் வீசிய 3-வது ஓவரில் 21 ரன்​களும், கைல் ஜேமிசன் வீசிய 4-வது ஓவரில் 20 ரன்​களும் விளாசப்​பட்​டன.

இந்த ஜோடி​யின் அதிரடி​யால் 5 ஓவர்​களி​லேயே இந்​திய அணி 100 ரன்​களை​யும், தொடர்ந்து பவர்​பிளேவில் 118 ரன்​களை​யும் குவித்து சாதனை படைத்தது. இதற்கு முன்​னர் கடந்த 2021-ல் செர்பியா​வுக்கு எதிராக ருமேனியா அணி பவர்​பிளேவில் 116 ரன்கள் குவித்​ததே சாதனையாக இருந்​தது. இதை தற்​போது இந்திய அணி முறியடித்​துள்​ளது.

மேலும் 100 ரன்​களை விரைவாக எட்​டிய அணி என்ற சாதனையையும் இந்​தியா படைத்​தது. இதற்கு முன்​னர் செர்​பியா​வுக்கு எதிரான ஆட்​டத்​தில் ருமேனியா 5.2 ஓவர்களில்100 ரன்​கள் எடுத்​திருந்​ததே சாதனையாக இருந்​தது.

சூர்​ய​வன்ஷி 19 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரிகளு​டன் 45 ரன்​கள் எடுத்த நிலையில் மேட் பிஷர் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். முதல் விக்​கெட்​டுக்கு சூர்​ய​வன்ஷி, அபிஷேக் ஜோடி 7.1 ஓவர்​களில் 133 ரன்​களை வேட்​டை​யாடியது.

நியூஸிலாந்து அணி​யின் பந்​து​வீச்சை வெளுத்து வாங்​கிய அபிஷேக் சர்மா 35 பந்​துகளில், 10 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் சதம் விளாசினார். இது அவரது 3-வது சத​மாக அமைந்​தது. அவர் 38 பந்​துகளில், 11 சிக்ஸர்கள், 9 பவுண்​டரி​களு​டன் 113 ரன்​கள் விளாசிய நிலை​யில் கைல் ஜேமிசன் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

இதன் பின்​னர் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 5, சஞ்சு சாம்​சன் 18 ரன்களில் வெளியேறினர். திலக் வர்மா 1, நமன் திர் 4 ரன்​கள் சேர்க்க இந்​திய அணி 13.2 ஓவர்​களில் 4 விக்​கெட்​களை மட்​டும் இழந்து 199 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. ஆட்ட நாயக​னாக அபிஷேக் சர்மா தேர்​வானார். 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரை 3-0 என தன்​வசப்​படுத்​தி​யது. கிறைஸ்ட்​சர்ச்​சில் நடை​பெற்ற முதல் 2 போட்​டி​யிலும் இந்​திய அணி தலா 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது. 4-வது போட்டி வரும் 30-ம் தேதி ஆக்​லாந்​தில் நடை​பெறுகிறது.

‘ஹாட்​ரிக்’ வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிராக நேற்று வெலிங்டனில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. நியூஸிலாந்து மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக டி 20 தொடரை வென்றுள்ளது. கடந்த 2020-ல் டி 20 தொடரை 5-0 எனவும், 2022-ல் 1-0 எனவும் இந்திய அணி வென்றிருந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply