‘மறுவாழ்வுக்கு வழிகாட்டும் உடலுறுப்புக் கொடையாளர்கள்’ – முதல்வர் விஜய் பெருமிதம்

Priya
852 Views
1 Min Read

‘மனிதநேயச் சுடரை ஏந்தி, உயிர்களின் மறுவாழ்வுக்கு வழிகாட்டும் உடலுறுப்புக் கொடையாளர்களை பெருமையுடன் நினைவுகூர்வோம்’ என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உடலுறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், சிறுவன் ஹிதேந்திரனின் உடலுறுப்புகளை தானமாக வழங்கியதை நினைவுகூரும் வகையிலும் ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ஆம் நாள் தமிழ்நாடு உடலுறுப்பு தான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

உடலுறுப்பு தானம் என்பது, ஒருவர் மறைந்த பின்னரும் அவரது உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்கும் மகத்தான மனிதநேயச் செயலாகும். உறுப்பு மாற்று சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பலருக்குத் தானமாக வழங்கப்படும் ஒவ்வொரு உறுப்பும் புதிய நம்பிக்கையையும், புதிய வாழ்வையும் அளிக்கிறது.

மனிதநேயச் சுடரை ஏந்தி, உயிர்களின் மறுவாழ்வுக்கு வழிகாட்டும் உடலுறுப்புக் கொடையாளர்கள் அனைவரையும் இந்நாளில் பெருமையுடன் நினைவுகூர்வோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply