புத்தகக் கொள்முதல் முறைகேட்டை விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்: அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

Priya
883 Views
3 Min Read

கோவை பெரியார் நூலகத்தில் புத்தகக் கொள்முதல் முறைகேடு குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

பாமக தலைவர் அன்புமணி: கல்வி, அறிவை வளர்க்கும் நூல்களை வாங்குவதில் ஊழல் செய்வதை மன்னிக்கவே முடியாது. அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதுதான் நூலகங்களின் நோக்கம்.

எவராலும் அறியப்படாத, யாருக்கும் பயன்படாத நூல்களை இதுவரை இல்லாத விலையைக் கொடுத்து வாங்குவதை ஏற்க முடியாது. இதுதொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழலின் பின்னணி குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்: புத்தகங்கள் கொள்முதல் செய்ததிலேயே இந்த அளவுக்கு ஊழல் நடந்துள்ள போது, கட்டிடம் கட்டியதில் எந்த அளவுக்கு ஊழல் நடந்திருக்கும் என்பதை நினைக்கும்போதே அச்சமாக இருக்கிறது.

பெரியாருக்கு துரோகம் செய்த பெரும் கொள்ளைக்காரர்களை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். திமுக திராவிடம் பேசுவதே கொள்ளை யடிப்பதற்காகத்தான் என்பது நிரூபணமாகியுள்ளது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடைபெற்றி ருப்பதாக எழுந்துள்ள புகாரை தனி விசாரணைக் குழு அமைத்து உண்மைகளை வெளிக் கொண்டு வருவதோடு, இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கோவையில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடுகள் குறித்து நீதி விசாரணையும், சிறப்பு தணிக்கையும் நடத்தி, குற்றத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலராள பெ.சண்முகம்: தமிழ் சமூகத்தை அறிவார்ந்த திசையில் வழிநடத்த வேண்டிய நூலகத்திலேயே இத்தகைய அறிவு மோசடி நடைபெற்றுள்ளதை ஒருபோதும் ஏற்கமுடியாது.

அரசு உடனடியாக தமிழ் அறிஞர்கள் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவேண்டும். சிறப்பு புலன் விசாரணைக்குழு அமைத்து முறைகேடுகள் கண்டறிந்து அதற்கு காரணமான அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு.வீரபாண்டியன்: பெரியார் நூலகத்துக்கு வாங்கப்பட்ட நூல்களில் முறைகேடுகளும், ஊழலும் நூலகத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டு போட்டித் தேர்வுகளுக்கு தயாரானால் மிகப்பெறும் பாதிப்புகளே தேர்வர்களுக்கு உருவாகும். எனவே, இந்த முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உடனே உத்தர விட வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை. இத்தகைய போலியான நூல்கள் நீண்டகால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும்.

இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள். இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனே திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும்.

வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை: அறிவைப் பகிர வேண்டிய நூலகத்தையே, ஊழலுக்கான கூடாரமாக மாற்றியிருந்தால், அது வெறும் மக்கள் வரிப்பணக் கொள்ளை அல்ல; அறிவு கொள்ளை. இதற்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிச்சயமாக நிறுத்தவேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பெரியார் நூலகத்துக்கு நூல்கள் கொள்முதல் முறைகேடு அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

இதேபோல், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், எஸ்டிபிஐ மாநில பொறுப்பு தலைவர் உமர் பாரூக், தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply