சென்னையில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் பணிகள் நாளை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று பொதுவிநியோகத் திட்ட பொருட்களை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சிதம்பரனார், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்க நல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்பட்டுவரும் 1,346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த சேவையை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.முதியோர் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம்: சென்னையில் நாளை தொடக்கம்
சென்னையில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் பணிகள் நாளை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று பொதுவிநியோகத் திட்ட பொருட்களை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சிதம்பரனார், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்க நல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்பட்டுவரும் 1,346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த சேவையை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.