காங்கிரஸுடன் கருத்து வேறுபாடு இல்லை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விளக்கம்

Priya
636 Views
1 Min Read

தமாகா சார்பில் ‘ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியோருடன் ஆனந்த தீபாவளி’ கோடம்பாக்கத்தில் உள்ள அன்னை இல்லத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் பங்கேற்று ஆதரவற்ற முதியோருக்கும், பெண்களுக்கும் தீபாவளிப் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது: பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்செயல்களை விசாரணை செய்வதற்காக புதிதாக 28 போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது நல்ல செய்தியாகும்.

தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்கிற ரீதியில் அரசு இரும்புக் கரம் கொண்டு செயல்பட தொடங்கியிருக்கிறது. விலைவாசி உயர்வு அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது.

தமிழகத்தில் அதை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைக்கு தவெகவுக்கு ஆதரவாக தமாகா இருக்கிறது. தேர்தல் வரும்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. காங்கிரஸுக்கும், தமாகாவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply