தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாக பதவி விலக திருமாவளவன் வலியுறுத்தல்

Priya
666 Views
1 Min Read

எஸ்ஐஆர் என்ற பெயரில் சட்​ட​விரோத மாற்​றங்​கள் நடந்​துள்​ள​தால் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் உடனடி​யாக பதவி விலக வேண்​டும் என விசிக தலை​வர் திரு​மாவளவன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் ‘சிறப்​புத் தீவிர திருத்​தம்’ நடவடிக்​கை​களின்​போது பல்​வேறு முறை​கேடு​கள் நடந்​துள்​ள​தாக வெளி​யான செய்​தி​கள் அதிர்ச்சி அளிக்​கிறது.

13 கோடி வாக்​காளர்​களின் பெயர்​களை பாதிக்​கும் வகை​யில் அங்​கீ​காரமற்ற, சட்​ட​விரோத மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. புதிய வாக்​காளர்​களை பதிவு செய்​யும் படிவம் 6-ல் ஆட்​சேபனை​கள் எழுந்​துள்​ளது.

தொழில்​நுட்​பப் பிரிவு​கள் மூலம் வாக்​காளர் பட்​டியல் தரவுத்​தளம் மையப்​படுத்​தப்​பட்​டு, கள அளவில் உள்ள வாக்​காளர் பதிவு அலு​வலர்​களின் முடிவு​களை மீறி, தகு​தி​யுள்ள புதிய வாக்​காளர்​கள் பட்​டியலில் சேர்க்​கப்​படு​வது தடுக்​கப்​பட்​டுள்​ளது.

கோவா​வில் ஏற்​பட்ட மென்​பொருள் பிரச்​சினை​களால் உச்ச நீதி​மன்ற உத்​தரவு இருந்​த​போ​தி​லும், தகு​தி​யுடைய 97 பேர் வாக்​களிக்​கும் உரிமையை இழந்​துள்​ளனர்.

எனவே, தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார் தாமாக முன்​வந்து உடனடி​யாக பதவி விலக வேண்​டும். இது​வரை மேற்​கொள்​ளப்​பட்ட அனைத்து எஸ்​ஐஆர் நடவடிக்​கைகளும் ரத்து செய்​யப்பட வேண்​டும்.

மக்​களின் வாக்​குரிமை​யை​யும், தேர்​தல் ஜனநாயகத்​தை​யும் சீர்​குலைக்​கும் வகை​யில் செயல்​பட்​டுள்ள தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்​து, அவரை உடனடி​யாக கைது செய்து விசா​ரணைக்கு உட்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply