தமிழக வேளாண் பட்ஜெட் 2026-27 முக்கிய அம்சங்கள்

Priya
628 Views
6 Min Read

தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2026-27-ம் நிதி ஆண்டுக்​கான தவெக அரசின் முதலா​வது பட்​ஜெட் நேற்று (ஆகஸ்ட் 5-ம் தேதி) தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (ஆக.6) வேளாண் பட்​ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

‘வான்மகள்’ திட்டம் – 100 மகளிர் உட்பட 500 நபர்களுக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி உரிமம் 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நன்னெறி சாகுபடி; நஞ்சற்ற உற்பத்தி; உலகளாவிய ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.8.43 கோடி ஒதுக்கீடு

குறைந்த நீரில் அதிக மகசூல் உறுதி செய்ய நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம் செயல்படுத்தப்படும். 2.2 லட்சம் ஏக்கர் நிலம், 95,000 விவசாயிகள் பலனடைவர். இதற்காக ரூ.785 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கிராம அளவிலான 50 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் 80% மானியத்தில் அமைக்கப்படும். இதில் மகளிர் சுய-உதவிக் குழுக்களுக்கு 30% ஒதுக்கீடு வழங்கப்படும். இதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்குதல் மற்றும் 75%மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகளை தூர் வாருதல் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.8.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஆயிரம் ஏக்கர் பாசனம் பரப்பை உருவாக்கிட பொதுப்பிரிவைச் சார்ந்த 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் பின்னேற்பு மானியத்தில் அமைத்தல் ஆகியனவற்றிற்கு அதிகபட்ச மானியம் 60% வழங்கப்படும். இதற்காக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண் விளைப்பொருட்களுக்கு 100 சதவீதம் பயிர்க்காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் கண்காட்சி – தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழா ரூ.3 கோடி செலவில் நடத்தப்படும்.

உயிர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4000 சிறப்பு ஊக்கதொகை வழங்கப்படும்.

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும். வெற்றியாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும்.

தகுதிகள்: சிறு, குறு விவசாயிகள் கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை குறைந்தது 2 ஏக்கரில் சாகுபடி. தினை, சாமை, குதிரைவாலி மற்றும் எள் குறைந்தது 1 ஏக்கரில் சாகுபடி.செய்திருக்க வேண்டும்.

மாவட்ட அளவில் ‘வெற்றி விவசாயி விருது’ வழங்கப்படும். முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு 25 ஆயிரம், தகுதிகள் : நெல் (இறவை & மானாவாரி) சோளம், கம்பு, மக்காசோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை மற்றும் பருத்தி குறைந்தது 2 ஏக்கர் சாகுபடி. செய்திருக்க வேண்டும்.

5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். பரிசுத்தொகை ரூ.11லட்சம்

விவசாயிகளின் அனைத்து தேவைகளுக்கும் 8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.27.82 கோடி செலவில் உருவாக்கப்படும்.

வளமான மண்; வளமான வருங்காலம் என்பதால், மண்ணின் வளத்தை பாதுகாக்க ‘தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்’ ரூ. 122.51 கோடி செலவில் உருவாக்கப்படும்.

திரவ உயிர் உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3.56 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

விதை சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூ.7.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.9.36 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

LATEST

ஆன்லைன், செயலி மூலம் மதுபானம் விற்பனை: இன்று முதல் அமலுக்கு

ஓய்வூதியம், ஓய்வுகால நன்மைகளுக்கு ரூ.47,240 கோடி | தமிழக பட்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் செப்.8 வரை நடைபெறும்: பேரவைத் தலை

விபத்தில் மரணமடைந்தால் பத்திரிகையாளர்களுக்கு ரூ.2 லட்சம் நிவ

2026-27-ம் நிதியாண்டில் ரூ.1.73 லட்சம் கோடி கடன் வாங்க இலக்க

தமிழகம், புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக அமித் ஷா வருகை

சமூக நலன் – மகளிர் உரிமை துறைக்கு ரூ.9,818 கோடி | தமிழக பட்ஜ

நிதிநிலையை சரிசெய்ய படிப்படியாக நடவடிக்கை: தமிழக நிதித்துறை

காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ

கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்தும் நிலை: பட்ஜெட் குறித்து

சொன்னதை செய்யாத ‘புஸ்வாண பட்ஜெட்’ – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

ரூ.90 கோடியில் 5 புதிய அரசு ஐடிஐ-க்கள்: பட்ஜெட்டில் அறிவிப்ப

காவிரி விவகாரத்தில் வறட்டு பிடிவாதம் காட்டக் கூடாது: அரசுக்க

ஆன்லைன், செயலி மூலம் மதுபானம் விற்பனை: இன்று முதல் அமலுக்கு

ஓய்வூதியம், ஓய்வுகால நன்மைகளுக்கு ரூ.47,240 கோடி | தமிழக பட்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் செப்.8 வரை நடைபெறும்: பேரவைத் தலை

விபத்தில் மரணமடைந்தால் பத்திரிகையாளர்களுக்கு ரூ.2 லட்சம் நிவ

2026-27-ம் நிதியாண்டில் ரூ.1.73 லட்சம் கோடி கடன் வாங்க இலக்க

தமிழகம், புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக அமித் ஷா வருகை

சமூக நலன் – மகளிர் உரிமை துறைக்கு ரூ.9,818 கோடி | தமிழக பட்ஜ

நிதிநிலையை சரிசெய்ய படிப்படியாக நடவடிக்கை: தமிழக நிதித்துறை

காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ

கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்தும் நிலை: பட்ஜெட் குறித்து

சொன்னதை செய்யாத ‘புஸ்வாண பட்ஜெட்’ – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

ரூ.90 கோடியில் 5 புதிய அரசு ஐடிஐ-க்கள்: பட்ஜெட்டில் அறிவிப்ப

காவிரி விவகாரத்தில் வறட்டு பிடிவாதம் காட்டக் கூடாது: அரசுக்க

கரும்பு சாகுபடிப் பரப்பை அதிகரிக்க ரூ.9 கோடி மதிப்பீட்டில் கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

ரூ.2 கோடி மதிப்பீட்டில் பனை பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்படும். இதன் மூலம் பனை விதைகள், பனங்கன்றுகள் விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனைபொருள் உற்பத்திக் கூடாரங்கள் செயல்படுத்தப்படும்.

‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ – மாடித் தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல்வலைக் குடில்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தரமான விதை! வளமான விவசாயம் என்ற அடிப்படையில், நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்புத் திட்டம் ரூ 34.72 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

AI உழவர் செயலி – ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகள் வழங்க AI அடிப்படையிலான உழவர் செயலி உருவாக்கப்பட்டு ஸ்மார்ட் வேளாண்மை குறிப்புகள் வழங்கப்படும்.

பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கம் ரூ.203.64 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்க ‘தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்’ ரூ..63.81 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

1 கோடி விவசாயிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் மண் வள அட்டைகள் வழங்கப்படும்.

சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க ‘தமிழ்நாடு குறுதானிய இயக்கம்’ரூ.7.61 கோடி மதிப்பீட்டில் இயங்கும்.

அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத் தினை (Quinoa), பாப்பரை (Buck Wheat) குலசாமை (Brown Top Millet) ஆகிய பயிர்களின் செயல்விளக்கத் திடல்கள் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

ரூ.27.21 கோடி மதிப்பீட்டில் பருத்தி உற்பத்தியைப் பெருக்கிட ‘பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்’ உருவாக்கப்படும்.

ரூ.36 கோடி செலவில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமைக்கு வேளாண் காடுகள் திட்டம் ரூ.17.70 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டம் ரூ.7.35 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம் ரூ.56.72 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகள், உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20 % கூடுதல் மானியம் வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின்மோட்டார், சூரிய சக்தி பம்புசெட்டுகள், 300 ஆழ்துளை அல்லது குழாய்க்கிணறுகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும்.

மழை, வெயிலிலிருந்து விளைபொருட்களைப் பாதுகாக்க 43,500 தார்ப்பாய்கள் வாங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

எல் நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply