பிரதமர் மோடியின் தந்தையை விமர்சிக்க மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உரிமையில்லை: தமிழிசை கண்டனம்

Priya
767 Views
2 Min Read

“பிரதமர் தந்தை குறித்து விமர்​சிக்க காங்​கிரஸுக்கு உரிமையில்லை” என தமிழக பாஜக மூத்த தலை​வர் தமி​ழிசை சௌந்​தரராஜன் தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் அவரது தந்​தையை காங்​கிரஸ் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே தரக்​குறைவாக பேசி​யதற்கு கண்​டனம் தெரி​வித்து, தமிழக பாஜக மூத்த தலை​வர் தமி​ழிசை சௌந்​தரராஜன் தலை​மையில் சென்னை, எழும்​பூரில் உள்ள ராஜரத்​தினம் மைதானத்​தில் கண்​டன ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது.

இதில், தமிழக பாஜக துணைத் தலை​வர்​கள் வி.பி. துரைசாமி, டால்​பின் தரன் மற்​றும் நூற்​றுக்​கும் மேற்​பட்ட பாஜக தொண்​டர்​கள் கலந்​து​கொண்​டனர். அப்​போது தமி​ழிசை சௌந்​தரராஜன் பேசுகை​யில், “பிரதமர் குறித்து காங்​கிரஸ் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே தரக்​குறைவாகப் பேசி​யுள்​ளார். பிரதமர் மோடி​யின் தொடர் வெற்​றிகளுக்கு, காங்​கிரஸ் கட்​சி​யினரின் இதுபோன்ற விமர்​சனங்​களும் ஒரு காரண​மாக அமை​கின்​றன.

காங்​கிரஸ் கட்​சி​யில் உள்ள தலை​வர்​களுக்கு, தங்​கள் கட்​சித் தொண்​டர்​கள் யார் என்​ப​துகூடத் தெரிய​வில்லை. நூற்​றாண்டு கால ஆர்​எஸ்எஸ் சித்​தாந்​தத்தை, நீங்​கள் மட்​டுமல்ல, யாராலும் அழிக்க முடி​யாது.

எஸ்ஐஆர் மீது இவ்​வளவு எதிர்ப்பு தெரி​விப்​பவர்​கள், தங்​களது பத​வி​களை ராஜினாமாசெய்​து​விட்டு போராட வேண்​டியது​தானே? கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி நடத்​தும் போராட்​டத்​திற்கு அமெரிக்கா நிதி​யுதவி அளிப்​ப​தாகப் பாடகி ஒரு​வர் தெரி​வித்​துள்​ளார்.

சோனியா காந்​தி​யும், ராகுல் காந்​தி​யும் வெளி​நாட்​டுக் குரல்​களை இந்​தி​யாவில் ஒலிக்​கச் செய்து​கொண்​டிருக்​கிறார்​கள்” என்​றார்.

பிறகு அவர் செய்​தி​யாளர்​களிடம் பேசுகை​யில், “பிரதமர் தந்தை குறித்து தரக்​குறைவாகப் பேசுவதற்கு கார்​கேவுக்கு எந்த உரிமையும் கிடை​யாது.

பிரதமர் மோடியை எப்​போதெல்​லாம் விமர்​சிக்​கிறார்​களோ, அப்​போதெல்​லாம் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வரு​கிறது.

முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் ஊழல் செய்​ததற்​காகவே கைது செய்​யப்​பட்​டுள்​ளார். ஏற்​கெனவே அவருடன் தொடர்​புடைய இரு​வர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். பாஜகவை எதிர்க்​கிறோம் என்று கூறிக்​கொண்டு, திமுக பள்​ளிக் குழந்​தைகளுக்கு அநீதி இழைத்​தது.

பல்​வேறு தவறுகளைச் செய்​து​விட்டு, புதிய கல்​விக் கொள்கை மற்​றும் மும்​மொழிக் கொள்​கைக்கு எதிர்ப்பு தெரி​விப்​ப​திலேயே குறி​யாக இருந்​தது.

யார் தவறு செய்​திருந்​தா​லும் அவர்​கள் தண்​டிக்​கப்​படுவார்​கள் என்​பதை இந்​தக் கைது உணர்த்து​கிறது. தவறு செய்​ய​வில்லை என்​றால், நீதி​மன்​றத்​தில் நிரபராதி​கள் என நிரூபித்து வெளியே வரட்டும்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply