மதுரையில் குடமுழுக்கு சிறப்பாக நடந்ததை ஏற்க முடியாமல் திமுக பொய் பிரச்சாரம்: அமைச்சர் நிர்மல்குமார் விமர்சனம்

Priya
702 Views
1 Min Read

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு சிறப்பாக நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் திமுக பொய் பிரச்சாரம் செய்வதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவில் என் குடும்பம் அல்லது எனக்கு தெரிந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

மதுரை பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் காவல்துறை, மாநகராட்சி ஆகியோருடன் இணைந்து மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டேன். குடழுழுக்கு விழா தொடர்பான எல்லா விஷயங்களும் கோயில் நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டன.

இந்துசமய அறநிலையத்துறை மூலம் 9 ஆயிரம் பாஸ்களும் முறைப்படி வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலம் பாஸ்கள்வழங்கப்பட்டன. எனவே, இதில் எந்தவித குளறுபடியும் நடக்கவில்லை.

குடமுழுக்கு நிகழ்வு சிறப்பாக முடிந்த காரணத்தால் அதை திமுக பொறுத்துக் கொள்ள முடியாமல் பொய் பிரச்சாரங்களை பரப்புகிறது. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மின் தட்டுப்பாடு உள்ளது.

பஞ்சாப்பில் 14 மணி நேரம் பவர்கட் செய்யப்படுகிறது. கேரளாவிலும் மின்வெட்டு பிரச்சினை உள்ளது. பற்றாக்குறையை சமாளிக்க மின்சாரத்தை கொள்முதல் செய்கிறோம்.

காற்றின்வேகம் குறைந்ததால் காற்றாலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குறைந்துள்ளது. இந்த பற்றாக்குறையை போக்க சில நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து அக்டோபர் முதல் வாரத்தில் மின்சாரத்தை கொள்முதல் செய்ய உள்ளோம்.

முதல்வர் லண்டன் பயணத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று, தன்னுடைய இருப்பைகாட்டிக் கொள்ள டிடிவி தினகரன்என்ன வேண்டுமானாலும் பேசுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply