உச்சம் தொடும் முதல்வரின் இன்ஸ்டாகிராம் பக்கம்: ஃபாலோயர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது

Priya
701 Views
1 Min Read

தமிழக முதல்​வர் அலு​வல​கத்​தின் அதி​காரப்​பூர்வ இன்ஸ்டாகிராம் பக்​கம் குறுகிய காலத்​தில் 50 லட்​சம் ஃபாலோயர்​களை கடந்து புதிய மைல்​கல்லை எட்​டி​யுள்​ளது.

தமிழக முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்ற பிறகு, முதல்​வர் அலு​வல​கத்​தின் அதி​காரப்​பூர்வ சமூக வலை​தளப் பக்​கங்​களைப் பின்​தொடர்​வோரின் எண்​ணிக்கை அசுர வேகத்​தில் உயர்ந்து வரு​கிறது.

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் முதல்​வ​ராக இருந்த கால​கட்​டம் (மே 9-ம் தேதி) வரை, முதல்​வர் அலு​வல​கத்​தின் அதி​காரப்​பூர்வ இன்​ஸ்​டாகி​ராம் பக்​க​மான ‘cmotamilnadu’ 4 லட்​சம் ஃபாலோயர்​களு​டன் இயங்கி வந்​தது.

தொடர்ந்து விஜய் புதிய முதல்​வ​ராக பொறுப்​பேற்ற அடுத்த 24 மணி நேரத்​திலேயே இந்த எண்​ணிக்கை கிடு​கிடு​வென உயர்ந்து 10 லட்​சத்தை (1 மில்​லியன்) எட்​டியது.

தற்​போது புதிய அரசு பதவி​யேற்று நான்கு மாதங்​கள் நிறைவடைந்​துள்ள நிலை​யில், இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தைப் பின்​தொடர்​வோரின் எண்​ணிக்கை 50 லட்​சத்தை (5 மில்​லியன்) தாண்டி கவனம் ஈர்த்​துள்​ளது.

அரசு தரப்​பில் நிர்​வகிக்​கப்​படும் ஒரு சமூக வலைதள பக்​கம், இவ்​வளவு குறுகிய காலத்​தில் 50 லட்​சம் பயனாளர்​களை ஈர்த்து புதிய உச்​சத்தை தொட்​டிருப்​பது அரசி​யல், டிஜிட்​டல் தளங்​களில் ஒரு சாதனை​யாகவே பார்க்​கப்​படு​கிறது.

இன்​ஸ்​டாகி​ராம் தளம் மட்​டுமின்​றி, முதல்​வர் அலு​வல​கத்​தின் ‘எக்​ஸ்’ தளம் 24 லட்​சம் (2.4 மில்​லியன்) பயனாளர்​களு​ட​னும், முகநூல் பக்​கம் 19 லட்​சம் (1.9 மில்​லியன்) பின்​தொடர்​வோரு​ட​னும் கணிச​மான வளர்ச்​சியை பதிவு செய்​துள்​ளன.

புதிய அரசின் மீதான இளைஞர்​களின் அதி​கப்​படி​யான ஈர்ப்​பை​யும், டிஜிட்​டல் ஊடகங்​களில் அரசு நடவடிக்​கைகளைக் கவனிப்​ப​தில் பொது​மக்​கள் காட்​டும் ஆர்​வத்​தை​யும் இத்​தகைய வளர்ச்​சி வெளிப்படுத்துகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply