தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும்: முதல்வருக்கு நயினார் வேண்டுகோள்

Priya
604 Views
1 Min Read

ர​யில்வே திட்​டங்​களுக்கு நிலம் கையகப்​படுத்தி தமிழகத்​தின் உள்கட்​டமைப்பை மேம்​படுத்த மத்​திய அரசுக்கு துணை நிற்க வேண்​டும் என்று முதல்​வர் விஜய்க்கு பாஜக மாநில தலை​வர் நயினார் நாகேந்​திரன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தின் ரயில்வே திட்​டங்​கள், தமிழக ரயில்வே துறைக்கு மத்​திய அரசு இது​வரை ஒதுக்​கிய நிதி உள்​ளிட்​டவை தொடர்​பாக திமுக எம்​.பி. திருச்சி சிவா எழுப்​பிய கேள்விக்கு மத்​திய ரயில்வே அமைச்​சர் எழுத்​துப்​பூர்​வ​மாக பதில் அளித்​துள்​ளார்.

ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி ஆட்​சி​யில் தமிழகத்​தின் ரயில்வே துறைக்கு ஒதுக்​கப்​பட்ட நிதி​யைக் காட்​டிலும் 8 மடங்கு அதிக நிதி, மொத்​தம் 19 புதிய ரயில் திட்​டங்​கள், கிட்​டத்​தட்ட 500 கிமீ வரையி​லான புதிய ரயில் பாதைகள் உள்​ளிட்ட பல வளர்ச்​சித் திட்​டங்​கள் தற்​போதைய என்​டிஏ ஆட்​சி​யில் தமிழகத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்ளன என்​பதை அழுத்​தம் திருத்​த​மாக மீண்​டும் ஒரு​முறை எடுத்​துக் கூறி​யுள்​ளது மத்​திய அரசு.

அது​மட்​டுமின்றி புதிய திட்​டங்​களுக்கு மொத்​தம் 4,612 ஹெக்​டேர் நிலங்​கள் தேவைப்​படும் நிலை​யில், முந்​தைய திமுக அரசு அதில் வெறும் 26 சதவீதம், அதாவது 1,178 ஹெக்​டேர் நிலங்​களை மட்​டுமே கையகப்​படுத்​திக் கொடுத்​துள்​ளதை​யும் சுட்​டிக்​காட்​டி​யுள்​ளது மத்​திய அரசு.

எனவே, முந்​தைய அரசைப்போல கண்​மூடித்​தன​மான மோதல் போக்கை கடைப்​பிடிக்​காமல், ரயில்வே திட்​டங்​களுக்கு தேவைப்​படும் நிலங்​களை கையகப்​படுத்​தும் பணி​களை துரிதப்​படுத்​தி, தமிழகத்​தின் உள்கட்​டமைப்பை மேம்​படுத்​து​வ​தில் மத்​திய அரசுக்கு துணை நிற்​கு​மாறு முதல்​வர் விஜய்யை கேட்​டுக்​கொள்​கிறேன்​. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply