தமிழகத்தில் புதிதாக நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Priya
791 Views
1 Min Read

தமிழகத்தில் புதிதாக நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து இருவாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் புதிதாக நீதிமன்றங்கள் அமைப்பது, 425 தற்காலிக நீதிமன்றங்களை நிரந்தர நீதிமன்றங்களாக மாற்றுவது, நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, சிறார் நீதி வாரியங்கள் அமைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.

2 வாரங்கள் அவகாசம்

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதிதாக நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக நிலுவையி்ல் உள்ள திட்டங்கள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், பொதுத்துறைச் செயலர், நிதித்துறைச் செயலர், மனிதவள மேலாண்மை துறைச் செயலர் உள்ளிட்டோர் இருவாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply