“வள்ளலார் கருத்துகள் மக்கள் மனங்களில் சுடர்விட்டு எரிய வேண்டும்” – மு.க.ஸ்டாலின்

Priya
774 Views
1 Min Read

“வள்ளலார் ஏற்றிய அணையா விளக்கைப் போல அவர் வலியுறுத்திய சமூகநீதி, சமத்துவ மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகள் மக்கள் மனங்களில் சுடர்விட்டு எரிய வேண்டும்,” என முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தனிப்பெரும் கருணை நாள்; சாதி, சமயம், சடங்குகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் ஒன்றாகக் கருதிய வள்ளலார் பிறந்தநாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வள்ளலாரின் உயரிய கருத்துகள் உலகெலாம் சென்றடைய அனைத்துலக வள்ளலார் மாநாடு, அம்மாநாட்டில் 8 புதிய அறிவிப்புகள், வள்ளலார் முப்பெரும் விழா, வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயரைச் சூட்டியது என வள்ளலாரைப் போற்றிச் சிறப்பித்தது நமது திராவிட மாடல் அரசு.

வள்ளலார் ஏற்றிய அணையா விளக்கைப் போல அவர் வலியுறுத்திய சமூகநீதி, சமத்துவ மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளும் சுடர்விட்டு மக்கள் மனங்களில் எரிய வேண்டும். மதமென்னும் பேய் நம்மைப் பிடியாதிருக்க வேண்டும்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply