கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தார்: சிவப்பு துண்டுடன் பயணிப்பேன் என அறிவிப்பு

Priya
58 Views
1 Min Read

இந்​திய கம்​யூனிஸ்ட் மூத்த தலை​வர் சி.மகேந்​திரன் தவெகவில் இணைந்​தார். சிவப்பு துண்​டுடன் பயணிப்​பேன் என அறி​வித்​துள்​ளார். தமிழகத்​தில் தவெக ஆட்சி அமைத்​துள்ள நிலை​யில், பல்​வேறு கட்​சிகளை சேர்ந்த நிர்​வாகி​கள் தங்​கள் ஆதர​வாளர்​களு​டன் தவெக​வில் இணைந்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்​து​வரும், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யில் இருந்து அதன் மூத்த தலை​வர்​களில் ஒரு​வ​ரான சி.மகேந்​திரன் நேற்று தவெகவில் இணைந்​தார்.

தவெக பொதுச் செய​லா​ள​ரும், அமைச்​சரு​மான என்​.ஆனந்த் முன்​னிலை​யில் இந்த இணைப்பு நிகழ்ந்​தது. அப்​போது சி.மகேந்​திரன் பேசி​ய​தாவது: இந்த இயக்​கத்​தில் சிவப்பு துண்டு அணிந்து கொண்டே செயல்பட விரும்​பு​கிறேன். எனது வாழ்​நாள் முழு​வதும் சிந்​தித்​து, நிறைவேற்ற முடி​யாத பிரச்​சினை​யாக ஊழல் இருக்​கிறது. அதை ஒழிக்க முடி​யும் என்ற நம்​பிக்​கையை முதல்​வர் விஜய் தந்​திருக்​கிறார். அதனால்​தான் தவெக​வில் இணை​கிறேன்.

அரசின் பணம், திட்​டங்​கள் ஆகிய​வற்​றைச் சாதாரண ஒடுக்​கப்​பட்ட ஒரு​வனுக்கு கொண்டு போய் கொடுப்​ப​தற்​கான ஒரு சாத்​தி​யத்​தை, இந்த தேர்​தல் முதல்​வர் விஜய் தலை​மை​யில் தொடங்கி வைத்​திருக்​கிறது. இந்​தத் தேர்​தல் சாதியை ஒழித்​திருக்​கிறது. மதத்தை ஒழித்​திருக்​கிறது.

ஏழை பணக்​காரன் என்ற வேறு​பாடு​களை போக்​கி, இந்​திய ஜனநாயகத்​தில் ஒரு சராசரி குடிமக​னும் தேர்​தலில் நின்று வெற்றி பெற முடி​யும் என்​பதை முதல்​வர் விஜய் உரு​வாக்​கி​யிருக்​கிறார். பெரியார், மகாத்மா, அம்பேத்கர் ஆகியோர் எடுத்த இயக்கமாக இது வளர வேண்டும்.

அதற்கான விதை தற்போது போடப்பட்டிருக்கிறது. பொது​வுடமை என்ற கொள்​கை, அதன் வேர்​கள் மேலும் பலப்​படக்​கூடிய விதத்​தில் தவெக​வில் செயல்​படு​வேன். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply