நூற்றாண்டு மத்திய செயலக நூலகம் இடமாற்றம்: அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Priya
766 Views
1 Min Read

டெல்​லி​யில் உள்ள 135 ஆண்​டு​கள் பழமை​யான மத்திய செயலக நூல​கத்தை இடமாற்​றம் செய்​வது குறித்​தும், சென்ட்​ரல் விஸ்டா திட்​டத்​தின் கீழ் ஒதுக்​கப்​பட்​டுள்ள இடம் தொடர்​பான திட்ட விவரங்​களைத் தாக்​கல் செய்​ய​வும் மத்திய அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இந்​த நூல​க விவ​காரம் தொடர்​பாக செய்​தி​கள் வெளி​யானதால், உச்ச நீதி​மன்​றம் தானாக முன்​வந்து வழக்கை விசா​ரணைக்கு எடுத்த​து. நீதிப​தி​கள் சஞ்​சய்குமார், சஞ்​சீவ்சச்​தேவா அமர்வு விசாரணை நடத்​தி​யது.

அப்​போது, சென்ட்​ரல் விஸ்டா மறுசீரமைப்​புத் திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக பழமை​யான நூலகத்தை இடமாற்​றம் செய்​வது தொடர்​பாக​வும், நூல​கம் அமைப்​ப​தற்​காக ஒதுக்​கப்​படும் இடத்​தின் தள அமைப்​புத் திட்டம், முழு விவரங்​கள் அடங்கிய பிர​மாண பத்​திரத்தை 3 வாரங்​களுக்​குள் தாக்​கல் செய்​யு​மாறு மத்​திய அரசுக்கு நோட்​டீஸ் பிறப்​பித்து உத்​தர​விட்​டது. மேலும், நூல​கத்​தில் பாது​காக்​கப்​பட்டு வரும் 2 லட்​சம் புத்தகங்களை சேமித்து வைக்க இடம் இருக்​குமா? என்​பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply