அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

Priya
6 Views
1 Min Read

அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் காலி​யாக உள்ள அனைத்து உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​களை​யும் உடனடி​யாக நிரப்புவது தொடர்​பாக பாமக தலை​வர் அன்​புமணி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசின் உயர்​கல்​வித்துறை​யின் கீழ் செயல்​பட்டு வரும் 181 கலை, அறி​வியல் கல்​லூரி​களில் உள்ள ஒரு லட்​சத்து 26 ஆயிரத்து 959 இடங்​களுக்​கான மாணவர் சேர்க்​கைக்​கு, கடந்த மே 6-ம் தேதி அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டு, மே 7 முதல் மே 29-ம் தேதி வரை விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டன.

இதற்​காக 2.24 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​திருந்த நிலை​யில், அவர்​களுக்​கான கலந்​தாய்வு ஜூன் 5 முதல் 18-ம் தேதி வரை நடை​பெற்​றது.

இதில் வெறும் 71,502 இடங்​கள் (56.32 சதவீதம்) இடங்​கள் மட்​டுமே நிரப்​பப்​பட்​டன. மீத​முள்ள 55,457 (43 சதவீதம் இடங்கள்) நிரப்​பப்​பட​வில்​லை. காலி​யாக உள்ள இடங்​களை நிரப்ப கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் மீண்​டும் விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்டு வரு​கின்​றன.

அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​கள் வரலாற்​றில் இது​வரை இவ்​வளவு இடங்​கள் காலி​யாக இருந்​த​தில்​லை. அரசு கலைக் கல்​லூரி​களில் உயர்​கல்வி கிட்​டத்​தட்ட இலவச​மாகவே வழங்​கப்​பட்​டாலும் அரசு கல்​லூரி​களை புறக்​கணித்​து​விட்​டு, தனி​யார் கல்​லூரி​களில் மாணவர்​கள் சேர முதன்மை காரணம் கல்​வித்​தரம் மோசமடைந்து வரு​வது​தான்.

அரசு கலைக் கல்​லூரி​களில் கடந்த 12 ஆண்​டு​களாக உதவிப் பேராசிரியர்​களுக்​கான 9 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட​வில்​லை. ஆசிரியர்​கள் இல்​லாத​தால் கல்​லூரி​களின் கல்​வித்​தரம் மோசமடைந்​திருக்​கிறது.

இந்த காலிப்​பணி​யிடங்​களை நிரப்​புவதன் மூலம்​தான், அரசுக் கல்​லூரி​கள் மீதான நம்​பிக்​கை​யைப் பெற​முடி​யும். எனவே, அரசு கலைக் கல்​லூரி​களில் காலி​யாக உள்ள உதவிப் பேராசிரியர் இடங்​களை உடனடி​யாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்​கவேண்​டும் என அவர்​ வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply