சூர்​யா​வுடன் நடிக்க 3 முறை மறுத்தார் நஸ்ரியா!

Priya
791 Views
1 Min Read

ஜித்து மாதவன் இயக்​கத்​தில் சூர்யா நடித்​துள்ள திரைப்​படம், ‘சீன்’. நஸ்ரியா, நஸ்​லென், ஆனந்​த​ராஜ், லால் உள்​பட பலர் நடித்துள்​ளனர். ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்​துள்ள இப்​படம் நாளை வெளியாகிறது. இப்​படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்துகொண்டனர்.

அப்​போது சூர்யா பேசும்​போது, “இந்​தப் படத்​தில் புதிய திறமையாளர்​களும், சமூக வலை​தளங்​கள் மூலம் கவனம் பெற்றவர்​களும் இடம்​பெற்​றுள்​ளனர். நஸ்ரியாவைப் போன்ற சிறந்த நடிகையுடன் இணைந்​திருப்​ப​து மகிழ்ச்சி அளிக்​கிறது. சிறந்த நடிகர்​களு​டன் நடிக்க வேண்​டும் என்று நினைப்​பேன். அப்படி நஸ்ரியா​வுடன் நடிக்க வேண்​டும் என்று அணுகி​யும் அவர் சம்​மதிக்க வில்லை. 3 அல்​லது 4-வது முயற்​சிக்​குப் பிறகே அவர் நடிக்​கச் சம்​மதித்​தார்.

பல இயக்​குநர்​களும் நடிகர்​களும் அணுகி​யும் கூட, 12 ஆண்டுகளாக அவர் தமி​ழில் எந்​தப் படத்​தையும் ஒப்​புக்​கொள்ளாமல் இருந்​தார். இறுதி​யில் எங்​கள் படத்​தில் நடிக்​கச் சம்​மதித்​ததற்கு நன்றி.

ஒரு நடிகை​யாக நஸ்ரியாவை எனக்கு மிகவும் பிடிக்​கும். அவரின் தன்​னம்​பிக்​கையும், விஷயங்​கள் குறித்த தெளிவும், ஒரு காட்​சிக்​காகத் தயாராகும் முறையும் அதி​கம் பிடிக்கும். அவரது நடிப்பு அவ்​வளவு இயல்​பாக இருக்​கும். இதில் அவர் நடித்​துள்ள மாயா என்ற கதாபாத்​திரம் முற்​றி​லும் வித்தியாச​மானது. அதைச் சிறப்​பாக வெளிப்​படுத்​தி​யுள்​ளார். சண்​டைக்​காட்​சிகளுக்​காக நஸ்ரியா எடுத்த முயற்சி படத்​தில் தெரியும்” என்​றார் சூர்யா.

Share This Article
Leave a Comment

Leave a Reply