நடிகர் மிதுன் மகேஸ்வரன், மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி, நாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘அரிகொம்பன்’. கேரளா மற்றும் தமிழ்நாடு வனப்பகுதிகளில் அறியப்பட்ட காட்டு யானையை மையமாகக் கொண்ட இப்படம், பழங்குடி மக்களின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் சொல்கிறது.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இதில், தேவிகா கிருஷ்ணன், சுப்பிரமணியம் சிவா, அஜய், அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, மு. ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிச. 11-ல் வெளியாகும் இப்படத்தின் டீஸரை நடிகர் சசிகுமார் வெளியிட்டுள்ளார்.

