தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தே மோசடி நடக்குது: இயக்குநர் கேபிள் சங்கர்

Priya
25 Views
1 Min Read

மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ், ‘கல்லூரி’ வினோத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா’. மணி தெலகுட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தை, SVM ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ளார். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் , ஷாஜித் இருவரும் இசையமைத்துள்ளனர்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் கேபிள் சங்கர், “படத்தின் தலைப்பைப் பார்த்தபோது, ஏதோ சின்ன பட்ஜெட் படமாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால், ட்ரெய்லரை பார்க்கும்போது பிரமாண்டமாகத் தெரிகிறது. இந்தப் படம், கமர்சியல் படமாக வரும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. தெலுங்கு சினிமாவில், இதுபோன்ற மித்தாலஜிக்கல் படங்களை மிக அட்டகாசமாக எடுப்பார்கள். இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. மகேந்திரனுக்கு, திருப்புமுனையைக் கொடுக்கும் படமாக இது இருக்கும்.

QUBE-பும் UFO-வும், தாங்களே தனி ஆளுமை பண்ணக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களே தங்களுடைய படங்களை ஹார்ட் டிஸ்க்கில் திரையரங்குகளில் கொடுத்து திரையிடச் சொல்லலாம். ஆனால், எந்த தயாரிப்பாளர் சங்கமும் இதுபற்றி பேசவில்லை. இதில் பெரிய அரசியல் இருக்கிறது. அந்த அரசியலை சரியாகச் செய்துவிட்டால், சின்ன பட்ஜெட் படங்களை திரையரங்குகளில் திரையிடுவதில் மிகப்பெரிய செலவு இருக்காது என தெரிகிறது” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply