ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று கட்டாக் நகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஒடிசா மாநில துணை முதல்வர் பிரவதி பரிதா
ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை வழங்கப்படும், என்றும் மாதவிடாய் சுற்றின் முதல் அல்லது இரண்டாவது நாளில் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம், இது முழுவதுமாக பெண்களின் விருப்பத்தை பொறுத்தது என்றும் அறிவித்தார்.