செங்கல்பட்டு மாவட்டம் திருப்பூர் அருகே படூர் வீராணம் சாலையில் தனியார் மழலையர் பள்ளி திறப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் நேற்று கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

2019 ஆம் ஆண்டின் இறுதியில், கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியது. முதலில் ஆல்பா என்றும், பின்னர் பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஓமிக்ரான் என்றும் அழைக்கப்படும் இந்த வைரஸ் பல்வேறுவகையில் உருமாற்றம் பெற்றது.

சிங்கப்பூரில் அதிகளவில் பரவியுள்ள இது, 90 சதவீதத்திற்கு மேல் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத வைரஸ். இதனால் யாரும், பெரிய அளவில் பதற்றமடைய வேண்டாம்.

இந்தியாவில் 11 மாநிலங்கள் இந்த வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது.

ஒரு மாதத்திற்கும் மேலாக 10க்கும் குறைவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், இந்த பாதிப்புக்கான மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here