தற்போது 10 துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டதன் வழியாக, 100 பேர் பதவி உயர்வு பறி போகிறது என, மாநகராட்சி ஊழியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

மாநகராட்சிகளில் துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்ட உத்தரவை, அரசு திரும்பப் பெற வேண்டும் என கோரி, தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், ஆணையர், வருவாய்த் துறை செயலர், ஆணையர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து சுப்ரமணியன் கூறியதாவது: புதிய விதிகளின்படி துணை கலெக்டர்களை நியமிக்கக்கூடாது. ஆனால் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை என்கின்றனர்.

சட்ட விதிகளை மீறி, மாநகராட்சிகளில் துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்துறை செயலர், வருவாய்த் துறை செயலர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here