அந்நிய செலாவணி கையிருப்பை தக்க வைக்க தங்கத்தை விற்க இந்திய ரிசர்வ் வங்கி திட்டம்

Priya
29 Views
1 Min Read

அந்நிய செலாவணி கையிருப்பை தக்க வைக்க கையிருப்பில் உள்ள தங்கத்தின் ஒரு பகுதியை விற்க இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கையாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்க கையிருப்பை விற்றகவுள்ளதாத கூறப்படுகிறது. இதன் மூலம் சுமார் 7.5 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நியச் செலாவணியை ரிசர்வ் வங்கி வாங்கவுள்ளது.

தற்போது மேற்கு ஆசியாவில் (மத்திய கிழக்கு) நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தின் காரணமாக, இந்தியாவின் எரிசக்தி இறக்குமதிச் செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளன.

கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் சந்தையிலிருந்து தொடர்ச்சியாக அந்நிய முதலீடுகள் வெளியேறுதல் (Capital outflows) போன்ற காரணங்களால், கடந்த மே 20-ஆம் தேதியன்று இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. கடந்த 2026-ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியா சுமார் 86 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. தொடர்ச்சியான இந்தத் தங்கம் இறக்குமதி அதிகரிப்பால், நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அதிகரித்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply