வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை: புதிய மசோதாவை தாக்கல் செய்கிறது மத்திய அரசு

Priya
8 Views
2 Min Read

வந்தே மாதரம் பாடலை அவம​தித்​தால் அல்​லது அதை தடுத்​தால் 3 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை மற்​றும் அபராதம் வழங்க வகை செய்​யும் புதிய மசோ​தாவை வரும் நாடாளு​மன்ற கூட்​டத் தொடரில் மத்​திய அரசு தாக்​கல் செய்கிறது.

தேசி​யப் பாடலான வந்தே மாதரம் பாடலை அவமதிப்பவர்களுக்கும் அதை பாடு​வதற்கு தடை ஏற்​படுத்​து​வோருக்​கும் தண்​டனை வழங்​கும் தேசிய கவுரவ அவம​திப்பு தடுப்பு சட்​டத் திருத்த மசோ​தாவுக்கு மத்​திய அமைச்​சரவை ஏற்கெனவே ஒப்​புதல் அளித்துள்ளது.

தேசிய கீத​மான ‘ஜன கண மன’ இசைக்​கப்​படும் அரசு நிகழ்ச்சிகளில், தேசி​யப் பாடலான ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படுவதை அல்​லது பாடு​வதை கட்​டாய​மாக்கி மத்​திய உள்​துறை அமைச்​சகம் வெளி​யிட்ட வழி​காட்​டு​தல்​களைத் தொடர்ந்து மத்​திய அமைச்​சரவை இந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளித்​தது.

திங்​கட்​கிழமை (ஜூலை 20) தொடங்​கும் நாடாளுமன்ற மழைக்​கால கூட்​டத்​தொடரில் இந்த மசோதா கொண்​டு​வரப்பட உள்ளதாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. உள்​துறை அமைச்​சர் அமித்ஷா இந்த மசோதாவை நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​ய​விருக்​கிறார்.

இந்த மசோதா மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை​யில் நிறைவேற்றப்பட்ட பிறகு, தேசிய கீதம், தேசி​யக் கொடி, அரசியலமைப்​புச் சட்டம் போன்ற தேசிய சின்​னங்​கள் வரிசையில் இனி தேசி​யப் பாடலை அவம​திப்​பதும் தண்டனைக்குரிய குற்​ற​மாக மாறும். தேசி​யப் பாடலை அவமதிப் போருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்​டனை, அபராதம் விதிக்கும் இச்​சட்ட திருத்த மசோதா வழி​வகை செய்​கிறது.

மக்​களவை​யில் அறி​முகம் செய்​யப்​பட​வுள்ள பிற மசோதாக்களில், பிறப்​பு, இறப்பு பதிவை தாமத​மாக செய்​வதை தடுக்​கும் மசோ​தா​வும் அடங்​கும். இரண்டு ஆண்​டு​களுக்​குப் பிறகு தெரிவிக்​கப்​படும் பிறப்பு மற்​றும் இறப்​பு​களை இனி முதல் வகுப்பு நீதித்​துறை நடு​வரின் உத்​தர​வில் பேரில் மட்​டுமே பதிவு செய்ய இந்த திருத்​தம் வகை செய்​யும்.

உச்ச நீதி​மன்ற நீதிப​தி​களின் எண்​ணிக்​கையை 33-ல் இருந்து 37 ஆக உயர்த்​திய அவசர சட்​டத்​துக்கு ஒப்​புதலை பெறு​வதற்​கான சட்​டத்​திருத்த மசோ​தா​வும் வரும் கூட்​டத்​தொடரில் தாக்​கல் செய்யப்பட உள்​ளது. கடந்த கூட்​டத்​தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட, சர்ச்​சைக் குரிய வெளி​நாட்டு நன்​கொடை ஒழுங்​கு​முறை சட்​டத் திருத்த மசோ​தா, உயர் கல்​வித் துறை சீரமைக்கும் விக்​சித்​ ​பாரத்​ கல்​வி நிறுவன மசோ​தா ஆகிய​வை​யும்​ மக்​களவை​யில்​ பரிசீலனை மற்​றும்​ ஒப்​புதலுக்​​காகப்​ பட்டியலிடப்​பட்​டுள்​ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply