வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’

Priya
17 Views
3 Min Read

இந்​திய விண்​வெளி வரலாற்​றில் புதிய மைல்கல்​லாக, உள்​நாட்டு தனி​யார் நிறு​வனத்தால் முழுமை​யாக வடிவ​மைக்​கப்​பட்ட முதல் ஆர்பிட்​டல் வகை ராக்​கெட்​டான ‘விக்​ரம்​-1’ இன்று (ஜூலை 18) வெற்றிகரமாக விண்​ணில் ஏவப்​பட்டது.

ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள சதீஷ் தவான் விண்​வெளி மையத்​தின் முதலா​வது ஏவுதளத்​தில் இருந்து இன்று இந்த வரலாற்று சிறப்​புமிக்க முயற்சி வெற்றிகரமாக மேற்​கொள்​ளப்​பட்டது.

இன்று காலை 11.30 மணிக்கு விக்ரம்-1 ராக்கெட் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மேகமூட்டம் சார்ந்த வானிலை காரணமாக 35 நிமிடம் தாமதமாக பகல் 12.05க்கு விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விண்வெளித்துறையின் IN-SPACe அமைப்பின் தலைவர் பவன் கே கோயங்கா, “இந்தியாவின் தனியார் துறை சார்ந்த முதல் ஏவுதல் முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை முறைப்படி அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். விக்ரம்-1 ராக்கெட் 453 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது எதிர்பார்ப்புகளையும் தாண்டிய ஒரு சாதனை” என தெரிவித்துள்ளார்.

ராக்கெட் ஏவப்படுவதை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேரில் பார்வையிட்டார். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து அவர், இந்த திட்டத்தில் தொடர்புடைய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ‘ஸ்​கைரூட் ஏரோஸ்​பேஸ்’ தயாரித்​துள்ள இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

பிரதமர் தனது எக்ஸ் பதிவில், “இந்திய விண்வெளிப் பயணத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய மைல்கல். இன்று காலை 11.30 மணிக்கு ஸ்​கைரூட் ஏரோஸ்​பேஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-1 ஐ வெற்றிகரமாக ஏவும்.

விரைவான மற்றும் தேவைக்கேற்ப ஏவுதல் சேவைகளை வழங்கும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நமது இளைஞர்களின் திறமை, உறுதி, தொழில்முனைவு மனப்பான்மை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.

மேலும், நமது விண்வெளித்துறை சீர்திருத்தங்கள், புத்தாக்கம், தொழில்முனைவுக்கான புதிய வாய்ப்புகள் ஆகியவற்றை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதையும் இது காட்டுகிறது.

இந்த வெற்றிகரமான ஏவுதலுக்காக ஸ்கைரூட் ஏராஸ்பேஸ் குழுவினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். விக்ரம்-1 வானில் உயர்ந்து, சரித்திரம் படைத்து, ஒரு தலைமுறை புத்தாக்கவாதிகளுக்கு உத்வேகம் அளிக்கட்டும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் வெற்றியை அடுத்து, #IndiaWithVikram1 என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ஸ்கைரூட் குழுவின் வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு அனைத்து இந்தியர்களையும் குறிப்பாக எனது இளம் நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

‘மிஷன் ஆகமன்:

‘ஸ்​கைரூட் ஏரோஸ்​பேஸ்’ என்ற தனி​யார் நிறு​வனம் தயாரித்​துள்ள இந்த ராக்கெட்டின் பயணத்​துக்கு ‘மிஷன் ஆகமன்’ என்று பெயரிடப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யாவை சேர்ந்த தனி​யார் நிறு​வனம், தான் சொந்தமாக உரு​வாக்​கிய ஏவு​தளத்தை பயன்​படுத்தி செயற்​கைக்​கோளை விண்​வெளி சுற்​றுப்​பாதை​யில் நிலை நிறுத்த முயற்​சிப்​பது இதுவே முதல் முறை​யாகும்.

இந்த பயணத்​தின் நோக்​கம் ஒர் செயற்​கைக்​கோளை மட்டும் விண்​ணில் செலுத்​து​வது அல்ல. மாறாக, ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் விண்​வெளி பயணத்தின் போது எவ்​வாறு செயல்​படு​கின்றன என்​பதை நேரடி​யாக மதிப்​பீடு செய்​து தரவு​களை சேகரிப்​பதே இந்த சோதனை​யின் பிர​தான இலக்​காகும்.

350 கிலோ வரை எடை கொண்ட சிறிய மற்​றும் நடுத்தர அளவி​லான செயற்​கைக்​கோள்​களை 450 கிமீ தூரத்​தில் பூமி​யின் தாழ்​வான சுற்​றுப்​பாதை​யில் நிலைநிறுத்​தும் வகை​யில்​ இந்​த ராக்​கெட்​ வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply