காமன்வெல்த் நாயகன் ராஜா முத்துப்பாண்டிக்கு குவியும் பாராட்டு.!! பிரதமர், குடியரசு தலைவர் வாழ்த்து

Priya
281 Views
1 Min Read

 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு , பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாகக் கூறி, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பளுதூக்குதலில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிடைத்துள்ளது.

South Asians & Diasporaகிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு எனது வாழ்த்துகள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. அவரது வருங்கால முயற்சிகளுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இவர், 2019-இல் ஏற்பட்ட கடுமையான முழங்கை தசைநார் காயம் மற்றும் அறுவை சிகிச்சைகளைக் கடந்து, இந்த உலகளாவிய மேடையில் மீண்டு வந்து பதக்கம் வென்றுள்ளார். இதனிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில் அவர், 2026-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் சாதனையை எண்ணி தேசமே பெருமை கொள்கிறது. உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள் என கூறி உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply