அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்த பேச்சு 99% நிறைவு: பியூஷ் கோயல் தகவல்

Priya
38 Views
1 Min Read

அமெரிக்​கா, இந்​தியா இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது.

இதுகுறித்து மத்​திய வர்த்தக அமைச்​சர் பியூஷ் கோயல் கூறிய​தாவது: இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்​பந்த பேச்​சு​வார்த்தை இறு​தி​க்கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. அமெரிக்க சந்​தை​யில் இந்​தி​யா​வுக்கு முன்​னுரிமை அளிப்​பதே இந்த ஒப்​பந்​தத்​தின் முக்​கிய நோக்​கம் ஆகும். அண்டை நாடு​கள் மற்​றும் தென்​கிழக்கு ஆசிய நாடு​களை​விட இந்​தி​யா​வுக்கு கூடு​தல் போட்​டித் தன்​மையை வழங்​கு​வதற்​கான சட்ட ரீதி​யான வழி​முறை​களை அமெரிக்கா கண்​டறிய வேண்​டும். பல்​வேறு பொருட்​களுக்​கான சலுகைகள், வர்த்தக தடைகளை நீக்​குதல் போன்ற 99% அம்​சங்​கள் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளன.

இன்​னும் 1% விவ​காரத்​தில் மட்​டுமே முடிவு எட்​டப்பட வேண்​டும். இது மிக​வும் நியாய​மான, மிக​வும் சமமான ஒப்​பந்​தம். இரு நாடு​களுக்​கிடையி​லான நேர வித்​தி​யாசம் காரண​மாக சில நேரங்​களில் இரவில் விழித்​திருக்க வேண்​டி​யிருந்​தது. நான் பொது​வாகவே தாமத​மாக தூங்​கு​வ​தால் எனக்கு அது பிரச்​சினை​யாக இல்​லை. ஆனால் எனது குழு​வினர் நள்​ளிரவு வரை பேச்​சு​வார்த்தை நடத்​தி​ய​தால் சற்று சிரமப்​பட்​டனர். மற்​றபடி எந்த அழுத்​த​மும் இல்​லை. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply