ஊடுருவல்காரர்களின் வாக்குகளைப் பாதுகாக்க விரும்புகிறார் ராகுல்: அமித் ஷா விமர்​சனம்

Priya
663 Views
1 Min Read

ஊடுருவல்காரர்களின் வாக்​கு​களைப் பாது​காக்க ராகுல் காந்தி விரும்​பு​கிறார் என மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா விமர்​சனம் செய்​தார்.

மத்​திய உள் துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று பிறந்த நாளை கொண்​டாடி​னார். இதையொட்​டி, டெல்​லி​யில் நடை​பெற்ற விழாவில், யமுனையைத் தூய்​மைப்​படுத்​து​வதற்​காக ரூ.8,941 கோடி மதிப்​பிலான திட்​டங்​களைத் தொடங்கி வைத்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: காங்​கிரஸ், ஆம் ஆத்மி அரசுகள் யமுனை நதி​யில் கழி​வுநீர் கலக்க அனு​ம​தித்​தன. நாங்கள் அதனை மே 2029-க்​குள் தூய்​மைப்​படுத்​து​வோம். பாஜக தேர்​தல்​களில் தொடர்ந்து வெற்றி பெற்று வரு​கிறது. இது எதிர்க்​கட்​சி​யினருக்கு கவலையை ஏற்​படுத்தி உள்​ளது.

அவர்​கள் தேர்தல் தோல்​வியை மறைக்க வாக்​குத் திருட்டு நடப்​ப​தாக சாக்​குப்​போக்கு​களை கூறுகின்​றனர். ராகுல் ஜி, நீங்​கள் தொடர்ந்து வாக்குத் திருட்டு பற்​றிப் பேசுகிறீர்​கள். ஏனென்​றால் ஊடுரு​வல்​காரர்​களின் வாக்​கு​களைப் பாது​காக்க விரும்​பு​கிறீர்​கள்.

அரசி​யல் சூழ்ச்சி மூலமோ கூட்​டத்​தைக் கூட்டி அழுத்​தம் கொடுப்ப​தன் மூலமோ மக்​கள் வழங்​கிய தீர்ப்பை உங்​களால் மாற்ற முடியாது. தேர்​தல்​களில் வெல்​வதற்கு போராட்டங்களையும் தர்​ணாவை​யும் நடத்​தி​னால் மட்​டும் போதாது. பஞ்​சாபில் போதைப்​பொருள் கடத்​தல் பெரும் பிரச்சினை​யாக உள்​ளது. வரும் தேர்​தலில் ஆம் ஆத்மி அரசு அகற்றப்​படும். தே.ஜ.கூட்​டணி ஆட்​சிக்கு வரும். போதைப்​பொருள்​ கடத்​தல்​ முடிவுக்​கு வரும்​. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply