மத்திய அரசு, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளைத் தளர்த்தியுள்ளதால், இனி டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமையாகிறது.
வழக்கமாக, ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டுமென்றால் ஓட்டுநர் சோதனைக்காக ஆர்டிஓ அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். அதற்குப் பதிலாக தனியார் நிறுவனங்களே ஓட்டுநர் சோதனையை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஓட்டுநர் சான்றிதழையும் அந்த நிறுவனமே வழங்கலாம்.
தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான அங்கீகாரம் அளிப்பதால், வாகனப் பயிற்சி மையங்களின் தரம் உயரவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் கருதப்படுகிறது.
ஜூன் 1ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வரும் இந்த புதிய நடைமுறையைப் பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
https://parivahan.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இணைதளத்தில் உள்ள டிரைவிங் லைசென்ஸ் பகுதியில் விண்ணப்ப படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும். ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.
LLR பெற ரூ.200, LLR Renewal ரூ.200, சர்வதேச உரிமம் ரூ.1000, நிரந்தர உரிமம் ரூ.200 லைசென்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.