தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கோடை மழையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமாக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கூடுதலாக தற்போது வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளதால், அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக 22 மற்றும் 23ஆம் தேதிகளில், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தேனி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகிள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து 24-ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்று கூறப்படுகிறது.