தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் தென் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அடுத்த 3 அல்லது 4 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று (மே 28) முதல் ஜூன் 3ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழகத்தை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் இன்று (மே 28) மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அறிக்கையில் உள்ளது.