இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 31,008 பள்ளிகளில் பயிலும் 25 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது
அதன்படி தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளுக்கும் மதிய உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. தொண்டு நிறுவனங்களின் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறன் உடைய குழந்தைகளுக்கு வரும் ஜூன் 1ம் தேதி முதல் மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
இன்னொரு திட்டமான மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘. இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.