நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் சுமார் 8 முறை பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கவும், சுற்றுலா பயண முறையாகவும் தமிழகம் வருகை புரிந்தார்.
இந்நிலையில் வரும் 30 தேதி 3 நாட்கள் பயணமாக மீண்டும் தமிழகம் வருகிறார். குறிப்பாக கன்னியாகுமரிக்கு வருகை தரும் மோடி விவேகானந்தர் நினைவு மண்டப தியானக் கூடத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் கடந்த 2019 மக்களவைத் தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரத்தின் போதும் பிரதமர் மோடி உத்திரகாண்ட் மாநிலத்திற்கு சென்று அங்குள்ள கேதார்நாத் கோயிலில் பாரம்பரிய உடை அணிந்து பணி குகையில் தியானம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.