சென்னை காசிமேடு முதல் கோவளம் வரை கடற்கரையை ரூ.100 கோடி மதிப்பீட்டில் மாநில அரசு கடற்கரை வளர்ச்சி திட்டத்தை மேம்படுத்தவுள்ளது .
இந்நிலையில் CMDA- வின் கடற்கரையை அழகாக்கும் திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்புகளின் விளைவுகள் அதிகமாக இருக்கும் என்றும் இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறும் செயல் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் கடற்கரையை அழகாக்குவதன் மூலம் மின்விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கப்படும். அதனால் இரவு நேரங்களில் ஆமைகள் முட்டையிடுவதற்காக கடற்கரையை நோக்கி வரும் நிலையில் மனிதர்கள் நடமாட்டத்தால் முட்டைகள் சேதம் அடையலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் சிஎம்டிஏ 40 மீட்டர் உயரமான கடற்கரை பரப்புத் திட்டத்திற்கு CRZ( Coastal Regulation Zone) அனுமதி சான்றிதழ் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசிடமும் இதற்கான உரிய சான்றிதழை பெற வேண்டும், சான்றிதல் பெறும் வரை மாநில அரசின் கடற்கரை வளர்ச்சி திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.