இயக்குநர் ஆகிறார் நடிகர் உன்னி முகுந்தன்

Priya
727 Views
1 Min Read

மலை​யாள நடிக​ரான உன்னி முகுந்​தன், தமிழில் சீடன், கருடன் ஆகிய படங்​களில் நடித்​துள்​ளார். ‘மார்​கோ’ படம் மூலம் பான் இந்​தியா ஸ்டா​ராக பிரபல​மான இவர், இப்​போது இயக்​குந​ராக அறி​முக​மாகிறார். இப்​படத்தை இந்தி திரைப்பட தயாரிப்பு நிறு​வன​மான குமார் மங்​கத் பதக் மற்​றும் அபிஷேக் பதக் தலை​மையி​லான பனோரமா ஸ்டூடியோஸ், உன்னி முகுந்​தன் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்​கிறது. இது உன்னி முகுந்​தனின் 50- வது திரைப்​படம்.

இதுகுறித்து உன்னி முகுந்​தன் கூறும்​போது,“50-வது திரைப்​படம் எனக்கு ரொம்​பவே ஸ்பெஷல். அதை எழு​தி, இயக்​கு​வது கூடு​தல் பொறுப்​பைக் கொடுத்​துள்​ளது. எனது சொந்த கதைகளைச் சொல்ல வேண்​டும் என்ற ஆசை, எனக்கு எப்​போதும் உண்​டு. அதற்​கான சரி​யான கதை​யும் சரி​யான தருண​மும் இது​தான் என்று உணர்ந்​தேன். இந்​தத் திரைப்​படம் பல்​வேறு மொழிகள் பேசும் ரசிகர்​களை நிச்​ச​யம் சென்​றடை​யும்” என்​றார். இப்​படம் பற்​றிய மற்ற விவரங்​கள் விரை​வில் அறிவிக்​கப்பட இருக்​கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply